Skip to content
September 21, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • வீட்டை அலங்கரிக்கும் பெண்
  • தியான செய்திகள்

வீட்டை அலங்கரிக்கும் பெண்

Editorial Team July 26, 2026 1 minute read
tn_78

ஒரு நாள், ஒரு கணவன் மனநல மருத்துவரை சந்திக்க வந்தான். அவனுடைய முகபாவனையிலேயே ஒரு வகையான அலட்சியமும், தன்னைப் பற்றிய பெருமையும் தெளிவாகத் தெரிந்தது. அவனை அமரச் செய்த மருத்துவர், மெதுவாக உரையாடலைத் தொடங்கினார்.

மருத்துவர் அவனிடம், “நீங்கள் என்ன வேலை செய்கி றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த கணவன் சிறிது பெருமிதத்துடன், “நான் ஒரு வங்கியில் கணக்காளராக இருக்கிறேன்” என்றான்.

மருத்துவர் அடுத்த கேள்வியை வைத்தார். “உங்கள் மனைவி என்ன செய்கிறார்?” கணவன் சற்றும் யோசிக்காமல், “அவள் வேலைக்குப் போவதில்லை. வீட்டில் சும்மா இருக்கிறாள்” என்று பதிலளித்தான்.

மருத்துவர் அவன் பதிலைக் கவனமாகக் கேட்டார். பின்னர் அமைதியாக, “அப்படியானால், உங்கள் வீட்டில் காலை உணவு யார் சமைப்பது?” என்று கேட்டார். கணவன், “என் மனைவிதான். அவள் வீட்டில்தானே இருக்கிறாள்” என்றான்.

“உங்கள் மனைவி எத்தனை மணிக்கு எழுந்திருப்பாள்?” என்று மருத்துவர் தொடர்ந்தார். “காலை ஐந்து மணிக்கே எழுந்திருப்பாள். சமைப்பதற்கு முன் வீட்டை பெருக்கி, சுத்தம் செய்ய வேண்டுமல்லவா” என்றான் கணவன்.
மருத்துவர் அவனையே பார்த்தபடி, “உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லுவது யார்?” என்று கேட்டார். “அவள்தான். நான் வேலைக்குச் செல்ல வேண்டியவன் அல்லவா?” என்று அவன் சொன்னான்.

“பிள்ளைகளை பள்ளியில் விட்டபின் அவள் என்ன செய்வாள்?” என்ற கேள்வி வந்தது. “பள்ளியில் விட்டுவிட்டு, காய்கறி கடைக்குச் சென்று வாங்குவாள். வீடு திரும்பியதும் துணிகளைத் துவைப்பாள்” என்றான்.

மருத்துவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், “நீங்கள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். “நான் நாள் முழுவதும் வேலை செய்திருப்பதால் ஓய்வெடுப்பேன்” என்று கணவன் இயல்பாகச் சொன்னான். “அந்த நேரத்தில் உங்கள் மனைவி என்ன செய்வாள்?” என்று மருத்துவர் கேட்டார். அவன் சற்று அலட் சியமாக, “பிள்ளைகளை படிக்க வைப்பாள், இரவு உணவு சமைப்பாள். பிறகு பரிமாறுவாள். அதற்குப் பிறகு பாத்திரங்களை கழுவுவாள். பிள்ளைகளைத் தூங்க வைப்பாள்” என்றான்.

அந்த நிமிடம், மருத்துவர் அவனை நேராகப் பார்த்தார். அவரது கண்களில் கண்டிப்பு இல்லை; ஆனால் உணர்த்தும் ஆழம் இருந்தது. அவர் மெதுவாகச் சொன்னார்: “நீங்கள் ஒரு வங்கியில் சில மணி நேரம் வேலை செய்கிறீர்கள். ஆனால் உங்கள் மனைவி, காலை முதல் இரவு வரை சம்பளம் இல்லாமல், விடுமுறை இல்லாமல், பாராட்டு இல்லாமல், குடும்பத்திற்காக இடையறாது உழைக்கிறாள். ஆனால் நீங்களோ ‘சும்மா இருக்கிறாள்’ என்று சொல்கிறீர்கள்.” அந்த வார்த்தைகள் கணவனின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அவன் முதன்முறையாக, தன் மனைவியின் நாள் முழுவதையும் சிந்திக்கத் தொடங்கினான்.

இறைமக்களே, கிறிஸ்தவ விசுவாசத்தில், வேலை என்பது சம்பளத்தால் அளவிடப்படுவதில்லை; மாறாக அது அன்பால் அளவிடப்படுகிறது. வீட்டில் இருந்து குடும்பத்தை கட்டி எழுப்பும் பெண், தேவன் கொடுத்த ஒரு உயர்ந்த பொறுப்பை நிறைவேற்றுபவள். சமையலறையும், குழந்தைப் பராமரிப்பும், வீட்டுப் பொறுப்புகளும் மனிதக் கண்களில் சிறியதாகத் தோன்றலாம்; ஆனால் அப்பணி வார்த்தைகளால் விவரிக்க முடியாததும், அன்பிற்காக கட்டப்பட்ட ஒன்றாகவும் காணப்படுகிறது.

ஒரு வீட்டை அலங்கரிக்கும் பெண், அந்த வீட்டின் ஆதாரத்தூணாக இருக்கிறாள். அவள் வெளியில் வேலை செய்யவில்லை என்பதற்காக தாழ்ந்தவள் அல்ல. மாறாக, அவள் குடும்பத்தை தேவன் கொடுத்த ஒரு திருச்சபையாகக் கருதி, அதில் விசுவாசமும் அன்பும் விதைக்கிறாள். ஆகையால், காலை முதல் மாலை வரை குடும்பத்திற்காக இயங்கும் ஒவ்வொரு பெண்ணும் பாராட்டுக்குரியவளே. அவளை மதிப்பது மனிதநேயம் மட்டுமல்ல; அது தேவனுக்குப் பிரியமான செயலும் ஆகும்.

“குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயி ருக்கிறாள்” (நீதிமொழிகள் 12:4) என இறைவேதம் பெண்களை உயர்வாக மதிப்பிடுகிறது.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: நரி அல்ல, புலி ஆகு!
Next: வருட இறுதியில் ஒரு சுயபரிசோதனை

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

Editorial Team September 9, 2026
ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை! Rahab
  • வேதாகம மனிதர்கள்

ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை!

September 9, 2026
யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு Johnathan
  • வேதாகம மனிதர்கள்

யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு

September 1, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

C.S.Lewis
  • கவிதைகள்

சி.எஸ். லூயிஸ் – கிறிஸ்தவ விசுவாசத்தை ஆழப்படுத்தும் 10 சிந்தனைகள்

Editorial Team September 21, 2026
mother terasa
  • கவிதைகள்

அன்னை தெரசா – அன்பால் உலகைத் தொட்ட கருணையின் தாய்!

Editorial Team September 21, 2026
jim eliot
  • கவிதைகள்

ஜிம் எலியட் – தேவனுக்காக வாழ்ந்த அர்ப்பணிப்பின் வாழ்க்கை!

Editorial Team September 21, 2026
william carey
  • கவிதைகள்

வில்லியம் கேரி – விசுவாசம், ஊழியம் மற்றும் தேவனைப் பற்றிய ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்

Editorial Team September 21, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.