Skip to content
November 11, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • வருட இறுதியில் ஒரு சுயபரிசோதனை
  • தியான செய்திகள்

வருட இறுதியில் ஒரு சுயபரிசோதனை

Editorial Team July 26, 2026 1 minute read
tn_80

ஒரு பொறுப்புள்ள ஓட்டுநர், தனது வாகனத்தை இயக்கும் முன் அவசரமாக பயணத்தைத் தொடங்குவ தில்லை. அவர் முதலில் தன்னைச் சுயமாக ஆய்வு செய்து கொள்கிறார். உடல் நலம் சரியிருக்கிறதா? மனம் அமைதியாக இருக்கிறதா? கவனம் சிதறிய நிலையில் உள்ளேனா? என்ற கேள்விகளைத் தன்னிடமே கேட்கிறார். அதன்பின்பு தான் வாகனத்தைச் சோதிப்பார். எரிபொருள் போதுமா? பிரேக் சரியாக செயல்படுகிறதா? டயர் காற்று சரியான அளவில் உள்ளதா? எல்லாம் ஒழுங்காக உள்ளதா என்று உறுதி செய்த பின்பே அவர் பயணத்தைத் தொடங்குகிறார். இந்தச் சுய பரிசோதனையே பாதுகாப்பான பயணத்தின் அடிப்படை ஆகும்.

இறைமக்களே, அதேபோலவே தேவன் நம்மை இந்த ஆண்டின் இறுதிவரை பாதுகாத்து வழிநடத்தி கொண்டு வந்துள்ளார். இது வெறும் காலண்டரில் ஒரு தேதி மாறும் நிகழ்வு அல்ல; மாறாக, நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதற்கான தேவன் தந்த ஒரு அருமையான வாய்ப்பு. கடந்த ஆண்டு முழுவதும் நாம் எந்த பாதையில் நடந்தோம்? எந்த எண்ணங்களோடு வாழ்ந்தோம்? எந்த முடிவுகளை எடுத்தோம்? என்பதை சிந்திக்க வேண்டிய தருணமே ஆண்டிறுதி.

ஓட்டுநர் வாகனத்தின் கண்ணாடியைப் பார்த்து பாதையைச் சரி பார்க்கிறதுபோல், இறைமக்களாகிய நாம் தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தை ஒரு கண்ணா டியாக எடுத்துக் கொள்ள வேண்டும். வேதாகமம் நம்மை அலங்கரிக்க அல்ல, நம்மை வெளிப்படுத்தவே எழுதப் பட்டுள்ளது. “நான் சரியான பாதையில் தான் பயணிக் கிறேனா? என் மனநிலை தேவனுக்கு உகந்ததாக உள்ளதா? என் வார்த்தைகள், செயல்கள், எண்ணங்களில் நேர்மை உள்ளதா?” என்ற கேள்விகளுக்கான நேர்மையான பதிலை வேதாகமத்தின் முன் நின்றால் மட்டுமே பெற முடியும்.

எனவே, புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்குமுன், நாம் நம்மையே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். என் உள்ளத்தில் கசப்பு இருக்கிறதா? பொறாமை, கோபம், அகந்தை, மன்னிக்காத மனம் போன்றவை என்னுள் வேரூன்றியுள்ளதா? வெளிப்படையாக பக்தியாகத் தோன்றி னாலும், உள்ளுக்குள் இரட்டை வாழ்க்கை வாழ்கிறேனா? தேவனோடு எனக்குள்ள உறவு ஆழமாக இருக்கிறதா அல்லது வெறும் பழக்கமாக மாறிவிட்டதா? இத்தகைய கேள்விகளைத் தைரியமாக நம்மிடமே கேட்க வேண்டும்.

ஒரு வாகனத்தில் சிறிய கோளாறு கூட பெரிய விபத்துக்கு வழிவகுக்கும். அதுபோல, நம் வாழ்க்கையில் திருத்தப்படாத சிறிய பாவங்கள், கவனிக்கப்படாத தவறுகள், நாளடைவில் பெரிய வீழ்ச்சிக்குக் காரணமாக மாறலாம். ஆகவே, புதிய ஆண்டுக்குள் நுழையும் முன், நம் மனதைத் தூய்மையாக்கவேண்டும். தேவனுடைய சமுகத்தில் தாழ்மையுடன் வந்து, “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்” (சங்கீதம் 139:23) என்று ஜெபிப்பதே இறைமக்களின் அழகான அணுகுமுறை.

தேவன் நம்மை குற்றவாளியாக்க அல்ல, சீர்படுத்தவே நம்மை ஆராய்கிறார். நாம் மனந்திரும்பி தேவனிடம் வரும்போது, அவர் மன்னிக்கத் தயங்குவதில்லை. அதே நேரத்தில், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடமும் சமாதானம் செய்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. இதுவே புதிய ஆண்டுக்கான ஆரோக்கியமான தொடக்கம்.

இந்த ஆண்டின் இறுதியில், நாம் ஒவ்வொருவரும் தேவனாகிய கண்ணாடியின் முன் நின்று நம்மையே ஆராய்வோம். அவசரமின்றி, அலட்சியமின்றி, நேர்மையோடு சுய பரிசோதனை செய்வோம். அப்பொழுது தான் புதிய ஆண்டு, ஒரு வெறும் புதிய தேதியாக இல்லாமல், ஒரு புதிய வாழ்க்கையாக, ஒரு புதிய பயணமாக மாறும். தேவனுடைய கிருபையும் சத்தியமும் நம்மை வழிநடத்த, தூய மனதோடு, சீரான வாழ்க்கையோடு, புதிய ஆண்டுக்குள் நுழைவோம். அதுவே பாதுகாப்பானதும் ஆசீர்வாதமானதுமான ஆவிக்குரிய பயணம் ஆகும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: வீட்டை அலங்கரிக்கும் பெண்
Next: நிராகரிப்பு முடிவல்ல

இதையும் படிக்கலாம்

butterfly
  • தியான செய்திகள்

இன்றைய வலிகளே நாளைய வலிமை

Editorial Team November 10, 2026
unexpected_time
  • தியான செய்திகள்

நேரத்தின் அருமை அறிந்து செயல்படுங்கள்

Editorial Team November 10, 2026
உற்றுக் கவனிக்கும் தேவன்
  • தியான செய்திகள்

உற்றுக் கவனிக்கும் தேவன்

Editorial Team November 10, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Mary of bethaney
  • வேதாகம மனிதர்கள்

மரியாள் – இயேசுவின் பாதத்தில் அமர்ந்த பெண்

Editorial Team October 26, 2026
யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன் job
  • வேதாகம மனிதர்கள்

யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன்

October 26, 2026
எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? Ethiopian eunuch
  • வேதாகம மனிதர்கள்

எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

October 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

butterfly
  • தியான செய்திகள்

இன்றைய வலிகளே நாளைய வலிமை

Editorial Team November 10, 2026
unexpected_time
  • தியான செய்திகள்

நேரத்தின் அருமை அறிந்து செயல்படுங்கள்

Editorial Team November 10, 2026
உற்றுக் கவனிக்கும் தேவன்
  • தியான செய்திகள்

உற்றுக் கவனிக்கும் தேவன்

Editorial Team November 10, 2026
pastor
  • தகவல்கள்

PASTOR: THE BIBLICAL DUTIES OF A FAITHFUL SHEPHERD

Editorial Team November 10, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.