Skip to content
September 21, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • நிராகரிப்பு முடிவல்ல
  • தியான செய்திகள்

நிராகரிப்பு முடிவல்ல

Editorial Team July 27, 2026 1 minute read
tn_79

ஒருவன் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்காக விண்ணப்பித்தான். அவனுக்கு அதிக கல்வி இல்லையாயினும், வேலை செய்யும் ஆர்வமும் நேர்மையும் இருந்தது. முதல்சுற்றில் அவனுக்கு சில வேலைகள் கொடுக்கப் பட்டன. அவன் அவற்றை மிகவும் கவனமாகவும் சிறப்பாகவும் செய்து முடித்தான். அதனால் அவன் முதல் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றான்.

அதன்பின் இரண்டாவது சுற்றான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டான். அங்கு அதிகாரிகள் அவனிடம் சில கேள்விகள் கேட்டார்கள். அவன் நேர்மையாகவும் தன்னம்பிக் கையுடனும் பதிலளித்தான். பின்னர், அவனுக்கு ஒரு விண்ணப்பம் கொடுத்து, “உன் முகவரி மற்றும் இ-மெயில் ஐ.டி எழுதுங்கள்” என்று கூறினர். அப்போது அவன் எளிமை யாக, “எனக்கு இ-மெயில் ஐ.டி இல்லை” என்று கூறினான். அதை கேட்ட அதிகாரிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின்னர், “இது ஒரு கம்ப்யூட்டர் நிறுவனம். இங்கே வேலை செய்ய வரும் ஒருவருக்கு குறைந்தபட்சமாக இ-மெயில் கூட தெரியவில்லை என்றால், அவர் இங்கு வேலை செய்ய தகுதியற்றவர்” என்று கூறி அவனை நிராகரித்தனர்.

அந்த வார்த்தைகள் அவனுடைய மனதை மிகவும் காயப்படுத்தின. அவன் மனமுடைந்து அங்கிருந்து வெளியே றினான். ஆனால் வாழ்க்கை அங்கேயே முடிந்து விடவில்லை.

கையில் இருந்த சில நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு, அவன் சிறிய அளவில் வெங்காயம் வாங்கி விற்பனை செய்யத் தொடங்கினான். ஆரம்பத்தில் அது ஒரு சிறிய முயற்சிதான். ஆனால் அவன் உழைப்பும் நேர்மையும் காரணமாக, அவனுக்கு சிறிது லாபம் கிடைத்தது. அந்த லாபத்தை மீண்டும் முதலீடாக மாற்றி, தனது வியாபாரத்தை வளர்த்துக் கொண்டான்.

நாளடைவில், அவன் ஒரு பெரிய வெங்காய வியாபா ரியாக வளர்ந்தான். அதன் பிறகு பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு, ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக உயர்ந்தான். அவன் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.

ஒருநாள், தனது வியாபாரத்திற்காக வங்கியில் ஒரு புதிய கணக்கு தொடங்க அவன் சென்றான். விண்ணப்பத்தை நிரப்பிக் கொண்டிருந்தபோது, வங்கி மேலாளர் அவனிடம், “உங்களுடைய இ-மெயில் ஐ.டி என்ன?” என்று கேட்டார்.

அதற்கு அவன் சிரித்தபடி, “எனக்கு இ-மெயில் ஐ.டி இல்லை” என்று பதிலளித்தான். அதை கேட்ட மேலாளர் மிகவும் ஆச்சரியப்பட்டார். “இவ்வளவு பெரிய தொழிலதிபராக வளர்ந்த நீங்கள், இ-மெயில் கூட இல்லாமல் எப்படி இத்தனை உயரம் அடைந்தீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த மனிதன் அமைதியாகச் சொன்னான்: “எனக்கு இவை எல்லாம் தெரிந்திருந்தால், இன்று நான் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையைத் துடைத்துக் கொண்டிருப்பேன்.”

இறைமக்களே, இந்தக் கதை நமக்கு ஒரு ஆழமான உண்மையை எடுத்துரைக்கிறது. கல்வியும் அறிவும் மிகவும் முக்கியமானவை. ஆனால் அவை மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பையும் எதிர்காலத்தையும் நிர்ணயிக்காது. மனிதர்கள் வெளிப்படையான தகுதிகளைப் பார்க்கிறார்கள்; ஆனால் தேவன் மனிதனுடைய இருதயத்தையும், அவன் உண்மைத் தன்மையையும், உழைப்பையும் பார்க்கிறார்.

இறைவேதம் இவ்வாறு கூறுகிறது: “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (1 சாமுவேல் 16:7). நாம் வாழ்க்கையில் நிராகரிக்கப்படும்போது, அதை தோல்வியாக எண்ணி மனம் உடைந்து விடக்கூடாது. சில நேரங்களில், அந்த நிராகரிப்பே நமக்காக தேவன் வைத்திரு க்கும் பெரிய திட்டத்தின் ஆரம்பமாக இருக்கலாம். ஒரு கதவு மூடப்படுவது, மற்றொரு பெரிய கதவு திறக்கப் படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். நாம் இழந்தது சிறியது; தேவன் கொடுக்கப்போவது பெரியது என்பதை நம்ப வேண்டும். இறைமக்களே, மனிதர்கள் மூடிய கதவுகள் தேவனால் திறக்கப்படும் வாய்ப்புகளாக மாறட்டும். தேவனை நம்பி தொடர்ந்து முயற்சி செய்தால், அவர் ஏற்ற காலத்தில் நம்மை உயர்த்துவார் என்பது நிச்சயம்.

· நிராகரிப்பு வந்தாலும் மனம் தளராதீர்கள்.
· நிராகரிப்பு வந்தாலும் உழைப்பை நிறுத்தாதீர்கள்.
· நிராகரிப்பு வந்தாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: வருட இறுதியில் ஒரு சுயபரிசோதனை
Next: கொண்டாட்டமா? உறவா?

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

Editorial Team September 9, 2026
ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை! Rahab
  • வேதாகம மனிதர்கள்

ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை!

September 9, 2026
யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு Johnathan
  • வேதாகம மனிதர்கள்

யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு

September 1, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

C.S.Lewis
  • கவிதைகள்

சி.எஸ். லூயிஸ் – கிறிஸ்தவ விசுவாசத்தை ஆழப்படுத்தும் 10 சிந்தனைகள்

Editorial Team September 21, 2026
mother terasa
  • கவிதைகள்

அன்னை தெரசா – அன்பால் உலகைத் தொட்ட கருணையின் தாய்!

Editorial Team September 21, 2026
jim eliot
  • கவிதைகள்

ஜிம் எலியட் – தேவனுக்காக வாழ்ந்த அர்ப்பணிப்பின் வாழ்க்கை!

Editorial Team September 21, 2026
william carey
  • கவிதைகள்

வில்லியம் கேரி – விசுவாசம், ஊழியம் மற்றும் தேவனைப் பற்றிய ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்

Editorial Team September 21, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.