Skip to content
August 6, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • மாறும் மனமும், மாறாத தேவனும்
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026 1 minute read
tn_99

மாலையின் மெதுவான காற்று வீசிக் கொண்டிருந்தது. கடற்கரையில் ஒரு சிறுவன் மகிழ்ச்சியாக ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தான். அவன் சிரிப்பு அலைகளை விட சத்தமாக ஒலித்தது. மணலில் கோட்டைகள் கட்டி, அலைகளைத் தொடர்ந்து ஓடி விளையாடிய அவன் வாழ்க்கை கவலையற்றது போலத் தோன்றியது. ஆனால் ஒரு கணத்தில், ஒரு பெரிய அலை வந்து அவன் செருப்பை இழுத்துச் சென்றது.

அவன் சிரிப்பு நின்றது கண்களில் நீர் திரண்டது அவன் சுற்றிலும் யாரும் இல்லை அவனுக்கு அது ஒரு பெரிய இழப்பாகத் தோன்றியது. கோபத்திலும் வருத்தத்திலும் அவன் கைகள் நடுங்கின. அந்த வலியில் அவன் மணலில் எழுதினான் “இந்த கடல் ஒரு திருடன்!” என்று.

சில நேரம் கழித்து, ஒரு இளைஞன் அங்கே வந்தான். அவன் முகத்தில் சோகத்தின் அடையாளங்கள் ஆழமாக பதிந்திருந்தது. கடலை பார்த்தவுடன் அவன் கண்கள் நின்று விட்டது போல இருந்தது. அந்த அலைகள் அவனுக்கு ஒரு அடையாளமாக இருந்தது. ஆம், அவன் மனைவியை சுனாமியில் பறித்துக் கொண்டுபோன அதே கடல். அவன் மெதுவாக மண்டியிட்டு உட்கார்ந்தான். மணலை கையில் பிடித்தான் கண்ணீர் அவன் கன்னங்களில் வழிந்தது “ஏன்?” என்ற கேள்வி அவன் உள்ளத்தில் ஒலித்தது. அந்த உடைந்த இதயத்தில் அவன் எழுதினான் “இந்த கடல் ஒரு கொலையாளி” என்று.

சூரியன் மேலேறியபோது, ஒரு மீனவன் அங்கே வந்தான். அவன் தோளில் வலை, உடலில் சோர்வு இருந்தாலும், இதயத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருந்தது. இன்று அவன் கடலில் இருந்து நிறைய மீன் பிடித்திருந்தான். அவன் குடும்பம் பசியின்றி இருப்பார்கள் என்ற சாந்தி அவன் முகத்தில் தெரிந்தது. அவன் கடலை நன்றியுடன் பார்த்தான். “இந்த கடல் இல்லையென்றால், என் வாழ்க்கை எப்படி இருக்கும்?” என்று எண்ணினான். அந்த நன்றியுள்ள மனதுடன் அவன் மணலில் எழுதினான்: “இந்த கடல் ஒரு கொடையாளி!” என்று.

அதற்குப் பிறகு ஒரு முத்து தேடுபவன் வந்தான். அவன் கடலுக்குள் ஆழமாக சென்று, உயிரை பணயம் வைத்து அரிய முத்துகளை எடுத்துவந்திருந்தான். அவன் கைகளில் ஒளிரும் முத்துகள் இருந்தன; அவன் கண்களில் நிறைந்தது மகிழ்ச்சியும் பெருமையும். அவன் கடலை நோக்கி ஆழமாக பார்த்தான். “எத்தனை செல்வம் இந்த கடலில் இருக்கிறது!” என்று எண்ணினான். அந்த மகிழ்ச்சியில் அவன் மெதுவாக எழுதினான்: “இந்த கடல் ஒரு பெரிய கொடை வள்ளல்!” என்று.

மாலை நேரம் நெருங்கியது. சூரியன் மறையும் நேரம். அந்த நேரத்தில் ஒரு பெரிய அலை வந்து, மெதுவாக அவர்கள் எழுதிய அனைத்தையும் அழித்துச் சென்றது. “திருடன், கொலையாளி, கொடையாளி, கொடைவள்ளல்” என்ற அத்தனை பட்டங்களையும் பாரபட்சமின்றி அழித்துப் போட்டது.

அன்பான இறைமக்களே, இந்த கதை நம் வாழ்க் கையின் உண்மையை வெளிப்படுத்துகிறது. ஒரே கடலை நான்கு பேர் நான்கு விதமாகப் பார்த்தார்கள். ஆனால் கடல் மாறவில்லை; அவர்கள் அனுபவங்களும் மனநிலையும் தான் மாறியது. அதைப்போல நாமும் வாழ்க்கையையும், தேவ னையும், நம் சூழ்நிலையின் அடிப்படையில் மதிப்பிடுகிறோம்.

சில நேரங்களில் நாம் இழப்புகளை சந்திக்கும் போது, “தேவன் எங்கே?” என்று கேட்கிறோம். நம்முடைய வேதனை நம்மை சந்தேகத்தில் தள்ளுகிறது. ஆனால் ஆசீர்வாதங்கள் வரும்போது, நாம் தேவனைப் புகழ்கிறோம். நம் உணர்ச்சிகள் மாறுகின்றன; ஆனால் தேவன் ஒருபோதும் மாறுவதில்லை.

ஆகையால், சூழ்நிலை சாதகமாயிருந்தாலும், பாதகமா யிருந்தாலும், தேவனுடைய நன்மையை நம்பிக்கையுடன் பற்றிக் கொள்ள வேண்டும். கண்ணீரின் நடுவிலும் விசுவாசத்துடன் நிற்க வேண்டும். ஏனெனில், நாம் புரியாத நேரத்தில் உதவி செய்யவும், நாம் காணாத வழியில் நம்மை நடத்தவும் தேவன் வல்லவராக இருக்கிறார்; காரணம் “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவ ராயிருக்கிறார்” (எபிரெயர் 13:8) என இறைவேதம் கூறுகிறது.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: நாவைக் காக்க வேண்டும்
Next: வெறுமையான வாழ்க்கை

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026
tn_97
  • தியான செய்திகள்

துக்கநாள் அல்ல, மீட்பின் நாள்

Editorial Team August 3, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026
tn_97
  • தியான செய்திகள்

துக்கநாள் அல்ல, மீட்பின் நாள்

Editorial Team August 3, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.