Skip to content
September 30, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • தேவனுடைய வேளை
  • தியான செய்திகள்

தேவனுடைய வேளை

Editorial Team June 23, 2026 1 minute read
unexpected_time

வேத வாசிப்பு: ஆதியாகமம் 41:1-14

இரண்டு வருஷம் சென்றபின்பு, …. காலமே பார் வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது (ஆதி.41:1,8).

ஏதாவது நன்மை நடக்காதா என்று ஏங்கி காத்திருப்பது மிகுந்த இளைப்பைத் தந்து விடுகிறது. ஆனால் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள்கூட நமக்கான சோதனைக் காலம் தான் என்பதை நாம் நினைவுபடுத்த வேண்டும். எப்பவுமே ஒரேமாதிரி இருக்காது. ஒன்றில் முடிவு வரும், அல்லது மாற்றம் வரும். இது நியதி. ஆனால் கர்த்தருக்கு ஒரு வேளை உண்டு. அது வரும்வரை அவருக்குள் உறுதியாயிருப்பதே உத்தமம்.

பானபாத்திரக்காரன் வேலையில் அமர்த்தப்பட்டு இரு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு தடவையேனும் அவன் யோசேப்பை நினைக்கவேயில்லை. இது அவனது தவறா? அல்லது, தேவனுடைய வேளை இன்னமும் வராதிருந்ததுதான் காரணமா? உலகரீதியாக பார்த்தால் அவன் செய்தது தவறுதான். ஆனால் ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் பார்த்தால் எல்லாமே தேவனுடைய கட்டுப்பாட்டிலே இருந்தது என்பது விளங்கும். ஆம், அவன் சொல்லி யோசேப்புக்கு விடுதலை கிடைத்திருந்தாலும்கூட, ராஜாதானே யோசேப்பின் தலையை உயர்த்துவது என்பது தேவனாலேயல்லாமல் யாராலே கூடும்? அடுத்து, பார்வோன் இந்த இரு ஆண்டுகளாக ஒரு கனவும் காணவில்லையா? ஆனால் குறிப்பிட்ட இந்த சொப்பனம் பார்வோனைக் கலங்கடித்தது கர்த்தருடைய வேளையின் ஆரம்பத்தை வெளிப்படுத்துகிறது. அந்நாட்களில் பல மந்திரவாதிகள், சோதிடர்கள் அரண்மனையில் பல தேவைகளுக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களின் செயல்கள் அசுத்தஆவிகளுடன் சம்மந்தப்பட்டவை. அவர்களால் பார்வோனின் சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்ல முடியாமற் போனது. இங்கேதான் பானபாத்திரக்காரன் யோசேப்பை நினைவுகூருகிறான். யோசேப்பு காவற்கிடங்கிலிருந்து அவசர அவசரமாக பார்வோனிடம் கொண்டு வரப்படுகிறான். இதுவே தேவனது செயலாகும்.

ஒரு காரியத்தைக் கவனித்தீர்களா? யோசேப்பு விடுதலைக்காக ஏங்கிய காலத்தில் விடுதலை கிட்டவில்லை. மாறாக, எந்தவித ஆயத்தமும் இல்லாத பொழுதிலே அவசர அவசரமாக விடுதலை கிடைத்தது. யோசேப்பு தடுமாறவில்லை. ஏனெனில் அவருக்கு தேவனுடனிருந்த உறவு நிலையாயிருந்தது. தனக்கு நேரிட்ட சோதனைகளிலெல்லாம் ஜெயம் பெற்ற யோசேப்பின் நற்குணம், அவர் தனது சகோதரர்களைச் சந்தித்தபோது வெளித்தெரிந்தது! இனி எதுவுமில்லை என்னும்போதுதான் பெரிய தருணங்கள் நம்மைத் தேடி வருகின்றன. அடுத்தது, கர்த்தருடைய வேளை வந்துவிட்டால், பின்பு அதை யாராலும் தடுக்கவோ தாமதிக்கவோ முடியாது. மேலும், நாம் தேவனுடனான உறவிலே உறுதியாக நிலைத்திருந்தால் எந்தவேளையிலும் நாம் தயங்காமல் முன்செல்லலாமே. ஆகவே, எந்த நிலைமையானாலும் தேவனுடைய வேளைக்குள் ஒப்புக் கொடுத்துவிட்டு அவருடைய கரத்துக்குள் அமர்ந்திருப்பதே சிறப்பானது.

ஜெபம்: தகப்பனே, எங்களுக்கு ஆயத்தப்படுத்தி வைத்த நன்மைகள் தாமதமானாலும் நீர் முன்குறித்த வேளையில் எங்களுக்கு கிடைக்கும் என முழுஇதயத்தோடும் விசுவாசித்து காத்திருக்கிறோம். ஆமென்.

Post navigation

Previous: எல்லாவிதத்திலும் நம்மைப்போல…
Next: மனிதன் மறப்பான்

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

Editorial Team September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026
போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்! ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

September 9, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

pope
  • உலகம்

மதச்சார்பற்ற பிரான்ஸில் திருச்சபை தனது குரலை வெளிப்படுத்த வேண்டும்: போப் லியோ XIV

Editorial Team September 30, 2026
india_church
  • இந்தியா

மதமாற்ற எதிர்ப்புச் சட்டம்: அச்சத்தில் தேவாலயங்கள் — கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு ‘உங்கள் சொந்த பொறுப்பில் நுழையுங்கள்’ என எச்சரிக்கை

Editorial Team September 30, 2026
Marriage
  • உலகம்

செயலில் உள்ள விசுவாசம் மகிழ்ச்சியான திருமணத்துடனும் குறைந்த விவாகரத்து விகிதத்துடனும் தொடர்புடையது: ஆய்வில் தகவல்

Editorial Team September 30, 2026
Music
  • கேள்வி பதில்கள்

நாம் ஏன் பாடுகிறோம்? — இசை, ஆன்மிகம் மற்றும் அர்த்தத்தைத் தேடும் பயணம்

Editorial Team September 30, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.