Skip to content
August 14, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • மனிதன் மறப்பான்
  • தியான செய்திகள்

மனிதன் மறப்பான்

Editorial Team June 23, 2026 1 minute read
Man forgets

வேத வாசிப்பு: ஆதியாகமம் 40:9-23

ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான் (ஆதி. 40:23).

மறக்கப்பட்டு, தள்ளப்பட்டு, ஒதுக்கப்பட்டுவிட்டதாக உணரக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படுமாயின் உண்மையிலேயே அது மிக கொடுமையான அனுபவம்தான். அதிலும் நமது தேவைகளில் நாம் எதிர்பார்த்தவர்களால் மறக்கப்பட்டுவிட்டோமே என்று அறியவரும்போது அது தரும் வேதனை சொல்லி முடியாது. இப்படிப்பட்ட ஒரு சோதனை யோசேப்பின் வாழ்விலும் நேரிட்டது. பானபாத்திரக்காரரின் தலைவன், சுயம்பாகிகளின் தலைவன் இருவரினதும் சொப்பனங்களுக்கும் யோசேப்பு அர்த்தம் கூறினார். முதலில் பானபாத்திரக்காரன்; மூன்று நாளைக்குள் ராஜா அவனை உயர்த்துவார் என்றார் யோசேப்பு. அத்துடன் ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார். அவன் வாழ்வடைந்திருக்கும்போது தன்னை நினைத்து, தன்னைக்குறித்து ராஜாவிடம் பரிந்துபேசி தன்னை விடுதலை செய்ய உதவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அடுத்தது சுயம்பாகி; இவனுடைய சொப்பனத்தின் அர்த்தப்படி இவன் மூன்று நாட்களுக்குள் தூக்கிலிடப்படவேண்டும். யோசேப்பு சொன்ன அர்த்தப்படியே யாவும் சரியாகவே சம்பவித்தது. “ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் மறந்துவிட்டான்.” (ஆதி.40:23). மூன்று நாட்களுக்குள் தனது விடுதலைக்கு ஒரு தருணம் கிடைத்தது என்று எண்ணியிருந்த யோசேப்பு, இன்னமும் இரண்டு வருடங்கள் காத்திருக்க நேரிட்டது.

பானபாத்திரக்காரன் செய்தது பெரிய துரோகம்தான்; ஆனால் யோசேப்புக்காக தேவன் நியமித்தவேளை இன்னமும் வராதிருந்தது என்பதே உண்மை. பானபாத்திரக்காரன் செய்தது அநியாயமேதான்; ஆனாலும், யோசேப்பின் குணாதிசயம் இன்னமும் துலக்கப்பட வேண்டியிருந்தது எனலாம். ஏற்கனவே குடும்பத்தாரால் மறக்கப்பட்ட சூழ்நிலையில், இந்த மனிதனாலும் மறக்கப்பட்டபோது, தன் நம்பிக்கையை இழந்துவிடாமல், ஒரு தருணம் போனால் இனி அடுத்த தருணம் வரும் என்ற உறுதியுடன் காத்திருந்தாரே யோசேப்பு, அந்த உறுதி நமக்கும் வேண்டும். இது கடினம் என்றாலும் இதுதான் உண்மை. ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற நினைவுக்கு இடமளித்தால் அதுவே நம்மைக் கொன்றுபோடும். மனிதர் நம்மைக் கைவிட்டாலும் ஆண்டவர் நம்மைக் கைவிடார் என்று உறுதியான நம்பிக்கையை நமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும். கர்த்தர் ஒருபோதும் தவறு செய்யமாட்டார். ஏற்றநேரத்தில் நமது தலையை அவர் உயர்த்துவார். பானபாத்திரக்காரன் சிபாரிசு செய்து யோசேப்பு விடுதலை பெறுவதிலும்பார்க்க, பார்வோனினாலே நேரடியாகவே யோசேப்பு உயர்த்தப்படுவதுமேன்மையல்லவா. ஆண்டவர் ஒருபோதும் தவறு செய்யவேமாட்டார். ஏற்றவேளையில் ஏற்ற காரியங்களை நேர்த்தியாகவே செய்து முடிப்பார். ஆனால் நாம் கர்த்தருடைய கரங்களுக்குள் அடங்கியிருக்க வேண்டும், இருப்போமா!

ஜெபம்: அன்பின் தேவனே, இதுபோன்ற சூழ்நிலைகளில் நீர் எங்களை மறப்பதில்லை என்ற முழுநிச்சயத்தோடு உமது கரத்திற்குள் அடங்கியிருக்க உதவி செய்யும். ஆமென்.

Post navigation

Previous: தேவனுடைய வேளை
Next: தேவ சமூகத்தில் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tcn_MT_Calcutta
  • சாட்சிகள்

வாழ்க்கையின் கடினமான காலத்திற்கும்… ஒரு நோக்கம் இருக்கலாம்

Editorial Team August 13, 2026
NLNL-OfficialTrailer
  • உலகம்

‘No Limbs, No Limits: The NickV Story’ – அடுத்த மாதம் திரையரங்குகளில்

Editorial Team August 13, 2026
cathedral
  • உலகம்

கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்

Editorial Team August 11, 2026
andrew
  • சாட்சிகள்

சகோதரர் ஆண்ட்ரூ – “தேவனின் வேதாகமக் கடத்தல்காரர்” (God’s Smuggler)

Editorial Team August 7, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.