Skip to content
October 2, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • கேள்வி பதில்கள்
  • கர்த்தர் சொன்னார் என்ற செய்தியை எப்படி பரிசோதிப்பது?
  • கேள்வி பதில்கள்

கர்த்தர் சொன்னார் என்ற செய்தியை எப்படி பரிசோதிப்பது?

Editorial Team July 4, 2026 1 minute read
tn_qa

ஒருவர் நம்மிடம் “கர்த்தர் சொன்னார்” என்று ஒரு செய்தியை பகிரும் போது, அதை நாம் நிதானமாக பரிசோதிக்க வேண்டும். ஏனெனில்,

  1. அது வெறும் தோன்றலாக அல்லது கற்பனையாக கூட இருக்கலாம்.
  2. அது உணர்ச்சியின் அடிப்படையில் வந்த ஒன்றாக கூட இருக்கலாம்.
  3. நம்மை ஏமாற்றும் பொய்யான செய்தியாக கூட இருக்கலாம்.
  4. ஆழமான புரிதல் இல்லாமல் சாதாரணமாக சொல்லப்பட்ட வார்த்தையாக கூட இருக்கலாம்.
  5. நம்மை திருப்திப்படுத்துவதற்காக சொல்லப்பட்ட செய்தியாக கூட இருக்கலாம்.
  6. நம் சூழ்நிலையை அறிந்து, அதற்கேற்ப உருவாக்கப்பட்ட செய்தியாக கூட இருக்கலாம்.
  7. நம்மை புகழ்வதற்காக சொல்லப்பட்ட வார்த்தையாக கூட இருக்கலாம்.

எனவே “தேவன் பேசினார்” என்று சொல்லப்படும் காரியங்களை நாம் கவனமாக பரிசோதிக்க வேண்டும்.

தேவன் உண்மையாக பேசினால்:

  1. அதில் பொய், வஞ்சகம், தந்திரம் மற்றும் சூழ்ச்சிகள் இருக்காது. அதில் உண்மையும், சத்தியமும், மாறாத தன்மையும் இருக்கும்.

It will be truth alone.

  1. அது கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கையையும், விசுவாசத்தையும், அவரை சார்ந்திருக்கும் மனநிலையையும் அதிகரிக்கும்.

It will lead us to rely on God.

  1. அது நம்மை உடைக்கும், உருவாக்கும், சீர்படுத்தும், தேற்றும், தாழ்மைப்படுத்தும் மற்றும் மனந்திரும்புதலை உருவாக்கும்.

It will transform us.

  1. சுய புகழ்ச்சியை விட தேவ புகழ்ச்சி உண்டாகும். எல்லா மகிமையும், கனமும் கர்த்தருக்கே செலுத்தப்படும்.

Ultimately God will receive honor and glory.

  1. ஏற்கனவே எழுதப்பட்ட தேவ வார்த்தைக்கும், வேதாகம சத்தியத்திற்கும் ஒருபோதும் முரண்படாது.

It will never contradict the written Word of God.

  1. சரியான தீர்மானம் எடுக்கவும், பிரச்சனைகளை சரி செய்யவும் தேவையான ஞானம், புத்தி மற்றும் அறிவை கொடுத்து நம்மை வழிநடத்தும்.

It will produce wisdom and knowledge.

  1. அது நம்மை தேவ சித்தத்தில் செயல்பட வைக்கும். நெருக்கடிகள் மற்றும் சாதகமற்ற சூழ்நிலைகள் இருந்தாலும், முன்னேற தேவையான தைரியம், உற்சாகம், உள்ளான பலம் மற்றும் வழிநடத்துதல் கிடைக்கும்.

It will give us strength, power, provision and courage.

  1. குழப்பம் மற்றும் முரண்பாடுகளுக்கு பதிலாக தெளிந்த புத்தி, தேவ சமாதானம், உள்ளான சந்தோஷம் மற்றும் ஆறுதல் பெருகும்.

It will give us surpassing peace and joy.

  1. தீர்க்கதரிசனம் சொல்லும் நபரின் வாழ்க்கையையும் வெளிப்படுத்தும். ஏனெனில் தேவ வார்த்தையை அறிவிக்கும் நபரின் வாழ்க்கை கனிகளும் முக்கியமானவை.

It will reveal the prophets.

  1. அது தேவ வல்லமையை வெளிப்படுத்தும். தேவனிடமிருந்து வரும் வார்த்தை வெறுமையாக திரும்பாமல், தேவ நோக்கத்தை நிறைவேற்றும்.

It will reveal divine power.

ஒவ்வொரு ஆவிக்குரிய செய்தியையும் நிதானத்தோடும், தேவ வார்த்தையின் வெளிச்சத்திலும் பரிசோதித்து நடப்போம்.

கர்த்தர் கிருபை தருவாராக.

– செலின்

ஒருவர் “கர்த்தர் சொன்னார்” என்று சொல்லும் போது, அதை தேவ வார்த்தை, சத்தியம், ஆவிக்குரிய கனிகள் மற்றும் தேவ சமாதானத்தின் அடிப்படையில் எப்படி பரிசோதிக்க வேண்டும் என்பதை விளக்கும் கிறிஸ்தவ சிந்தனை.

Tags:
God’s Voice, Prophecy, Discernment, Tamil Christian Message, Bible Truth, Spiritual Wisdom, Christian Life, Holy Spirit

Post navigation

Previous: வாழ்வியல் பாடங்கள் – அனுபவங்கள் கற்றுத்தரும் வாழ்க்கை உண்மைகள்
Next: Father’s Day – வேதாகமத்தின் படி தகப்பனின் பொறுப்பும் பிள்ளைகளின் கடமையும்

இதையும் படிக்கலாம்

Music
  • கேள்வி பதில்கள்

நாம் ஏன் பாடுகிறோம்? — இசை, ஆன்மிகம் மற்றும் அர்த்தத்தைத் தேடும் பயணம்

Editorial Team September 30, 2026
Melchisedek
  • கேள்வி பதில்கள்

மெல்கிசெதேக் யார்? — இயேசுவா? தேவனுடைய தூதரா? அல்லது ஒரு ராஜாவா?

Editorial Team September 21, 2026
cain
  • கேள்வி பதில்கள்

காயீன் சென்ற தேசத்தில் மக்கள் எங்கிருந்து வந்தார்கள்?

Editorial Team September 21, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

Editorial Team September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026
போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்! ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

September 9, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

love
  • தலைப்பு பிரசங்கங்கள்

அன்பே கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம்

Editorial Team October 2, 2026
Grace
  • வேதபகுதி பிரசங்கங்கள்

என் கிருபை உனக்குப் போதும்!

Editorial Team October 2, 2026
moses
  • வேதபகுதி பிரசங்கங்கள்

அவர் உனக்காக யுத்தம் செய்வார்!

Editorial Team October 2, 2026
david flood
  • வரலாறுகள்

டேவிட் ஃப்ளட்: ஆப்பிரிக்க மண்ணில் விதைக்கப்பட்ட ஒரு சிறிய விதை… ஆயிரக்கணக்கான மக்களின் விசுவாசத்திற்கு காரணமான மிஷனரி!

Editorial Team October 2, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.