Skip to content
October 2, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • கேள்வி பதில்கள்
  • தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்களை தேவ சித்தம் என்று எடுத்துக்கொள்ளாமல், சில கிறிஸ்தவ போதகர்கள் சில அரசியல் நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது ஏன்?
  • கேள்வி பதில்கள்

தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்களை தேவ சித்தம் என்று எடுத்துக்கொள்ளாமல், சில கிறிஸ்தவ போதகர்கள் சில அரசியல் நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது ஏன்?

Editorial Team July 4, 2026 1 minute read
tn_politics

கேள்வி: தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்களை தேவ சித்தம் என்று எடுத்துக்கொள்ளாமல், சில கிறிஸ்தவ போதகர்கள் சில அரசியல் நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது ஏன்?

பதில்:

ஒரு அரசியல் நிகழ்வையோ, தலைவரையோ தேவ சித்தம் என்று சிலர் கருதுவதற்கு அவர்களுக்கு கருத்து சொல்லும் உரிமை இருப்பது போலவே, அதைப் பற்றி வேறுபட்ட ஆவிக்குரிய பார்வையை வெளிப்படுத்துவதற்கும் மற்றவர்களுக்கு உரிமை இருக்கிறது.

எனவே இத்தகைய விஷயங்களில் சகலத்தையும் அறிகிறவர் தேவனே. ஆனாலும் தேவ சித்தம் என்ன என்பதை பகுத்தறியும் ஆவிக்குரிய முதிர்ச்சி கொண்ட ஊழியர்களும், விசுவாசிகளும் எழும்ப வேண்டியது அவசியம்.

யார் மெய்யான கிறிஸ்தவர்கள்?

  1. தேவ ராஜ்யம் வெளிப்பட, பாவத்திலிருந்து மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் விசுவாசித்து, பாவ அறிக்கை செய்து, அவருடைய இரத்தத்தின் மூலம் மீட்பைப் பெற்று, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று, கிறிஸ்துவை தன் வாழ்க்கையில் அறிக்கை செய்கிறவர்.
  2. ஆவிக்குரிய சபை வாழ்க்கையில் இணைந்து, ஜெபம், உபவாசம், உபதேசம், விசுவாசம், ஐக்கியம் ஆகியவற்றில் உறுதியாக நிலைத்திருப்பவர்.
  3. இந்த உலகத்தின் போக்குகளுக்கு ஒத்த வேஷம் போடாமல், நன்மை எது, தீமை எது, தேவ சித்தம் எது என்பதை பகுத்தறியும் புதிய சிந்தை கொண்டவர்.
  4. தேவ சித்தத்தை அறிந்து, தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு கிறிஸ்துவின் ஒளியாக இருந்து, அனுதினமும் சிலுவையை சுமந்து, சுயத்தை வெறுத்து, கிறிஸ்துவைப் போல வாழ தன்னை ஒப்புக்கொடுப்பவர்.
  5. உணர்ச்சிகளால் இழுக்கப்படாமல், தன் ஆவிக்குரிய அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல், இயேசு கிறிஸ்துவை தன் வாழ்க்கையின் மையமாக வைத்து வளர்ந்து செல்பவர்.
  6. தேவ வசனத்தின் படி வளர்ந்து, ஆவியின் கனிகளால் நிறைந்து, செயல்களின் மூலம் கர்த்தரை மகிமைப்படுத்தி வாழ்பவர்.
  7. எல்லாவற்றிற்கும் மேலாக, பரலோக வாஞ்சையோடும், பரிசுத்த ஆவியின் நடத்துதலோடும், இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி வாழ்பவர்.

மெய்யான கிறிஸ்தவன் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவன்

  1. காணப்படுகிறவை அனைத்தும் நிலையற்றவை என்பதை அறிந்திருப்பான். உலகத்தின் தாக்கங்கள் மற்றும் உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல, தேவ சித்தத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுப்பான்.
  2. தந்திரங்களும், வஞ்சனைகளும் அவனை எளிதில் வீழ்த்த முடியாது. ஏனெனில் அவன் விழிப்புணர்வோடும், தேவ ஞானத்தோடும் நடப்பான்.
  3. இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் எதிர்ப்புகளையும், நிந்தைகளையும் சந்தித்தாலும், உண்மையில் நிலைத்திருப்பான்.

பாவத்தை பாவம் என்றும், தீமையை தீமை என்றும், அநியாயத்தை அநியாயம் என்றும் அறிந்து நடப்பதே தேவனை அறிந்த வாழ்க்கையின் அடையாளம்.

  1. வெளிப்புற அடையாளங்கள், வார்த்தைகள் அல்லது தோற்றங்களை மட்டும் வைத்து முடிவு செய்யாமல், ஒருவரின் வாழ்க்கையின் கனிகளையும், செயல்களையும் கவனித்து பகுத்தறிவது ஆவிக்குரிய முதிர்ச்சியின் அடையாளம்.

சவுல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

  1. இஸ்ரவேல் மக்கள் மற்ற ஜாதிகளைப் போல ராஜாவை விரும்பினார்கள். மனித விருப்பமும் தேவ சித்தமும் எப்போதும் ஒன்றாக இருக்காது என்பதை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.
  2. சவுல் வெளிப்புற தோற்றத்தில் சிறப்பாக காணப்பட்டாலும், உள்ளான கீழ்ப்படிதலும் தாழ்மையும் குறைந்தபோது அவரது வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
  3. தேவன் எழுப்பிய தாவீதுக்கு எதிராக சவுல் பொறாமையிலும் பயத்திலும் செயல்பட்டார்.
  4. சவுலின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், கீழ்ப்படிதல் இல்லாத வாழ்க்கையின் விளைவுகளை காட்டுகின்றன.
  5. தேவனை சாராமல் தவறான வழிகளில் தீர்வுகளை தேடியது அவரது வீழ்ச்சிக்கு காரணமானது.

புதிய ஏற்பாட்டு அன்னாள் போல தேவ ராஜ்யத்தை எதிர்பார்த்திருப்போம்

  1. உலக அரசுகள் மனிதனுக்கு முழுமையான மீட்பை தர முடியாது.
  2. மனித தத்துவங்களும், உலக ஞானமும் தேவனுடைய இடத்தை எடுக்க முடியாது.
  3. வெளிப்புற மத வழக்கங்கள் மட்டும் மனிதனுக்கு உண்மையான மாற்றத்தை தராது.
  4. அன்னாள் தேவ ஆலயத்தை விட்டு பிரியாமல் ஜெபத்தோடு தேவ வாக்குத்தத்தத்தை எதிர்பார்த்தது போல, நாமும் தேவ ராஜ்யத்தின் நிறைவேற்றத்திற்காக விழித்திருந்து ஜெபிக்க வேண்டும்.

மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம் விக்கிரகங்களிலிருந்தும், உலக பற்றுகளிலிருந்தும் விலகி தேவனை மையமாக வைத்து வாழ்வதே ஆகும்.

முதிர்ச்சி பெற்ற கிறிஸ்தவன் வஞ்சனைகளில் சிக்காமல், தேவ ஞானத்தோடு தீர்மானம் எடுப்பான்.

வளர்ந்த கிறிஸ்தவன் உணர்ச்சிகளை விட தேவ சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பான்.

உண்மையான கிறிஸ்தவன் கிறிஸ்துவுக்காக பாடுகளையும் சகிப்பான். நீதியை நேசித்து அநியாயத்தை எதிர்ப்பான்.

மனித புகழையும், உலக மகிமையையும் அல்ல; தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய மகிமையையும் தேடி வாழ்வோம்.

கர்த்தர் தமது கிருபையால் நம்மை நடத்துவாராக.

– செலின்

மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளங்கள், தேவ சித்தத்தை பகுத்தறிதல், உணர்ச்சிகளை தாண்டிய விசுவாச வாழ்க்கை மற்றும் தேவ ராஜ்யத்தை எதிர்நோக்கும் ஆவிக்குரிய பார்வை குறித்து விளக்கும் கட்டுரை.

Tags:
True Christian, Tamil Christian Message, Christian Life, God’s Will, Spiritual Discernment, Jesus Christ, Bible Teaching, Christian Devotional

Post navigation

Previous: பரிபூரண தேவ சித்தத்தின் ஆராதனையில் இருக்க வேண்டிய பத்து காரியங்கள்
Next: வாழ்வியல் பாடங்கள் – அனுபவங்கள் கற்றுத்தரும் வாழ்க்கை உண்மைகள்

இதையும் படிக்கலாம்

Music
  • கேள்வி பதில்கள்

நாம் ஏன் பாடுகிறோம்? — இசை, ஆன்மிகம் மற்றும் அர்த்தத்தைத் தேடும் பயணம்

Editorial Team September 30, 2026
Melchisedek
  • கேள்வி பதில்கள்

மெல்கிசெதேக் யார்? — இயேசுவா? தேவனுடைய தூதரா? அல்லது ஒரு ராஜாவா?

Editorial Team September 21, 2026
cain
  • கேள்வி பதில்கள்

காயீன் சென்ற தேசத்தில் மக்கள் எங்கிருந்து வந்தார்கள்?

Editorial Team September 21, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

Editorial Team September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026
போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்! ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

September 9, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

love
  • தலைப்பு பிரசங்கங்கள்

அன்பே கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம்

Editorial Team October 2, 2026
Grace
  • வேதபகுதி பிரசங்கங்கள்

என் கிருபை உனக்குப் போதும்!

Editorial Team October 2, 2026
moses
  • வேதபகுதி பிரசங்கங்கள்

அவர் உனக்காக யுத்தம் செய்வார்!

Editorial Team October 2, 2026
david flood
  • வரலாறுகள்

டேவிட் ஃப்ளட்: ஆப்பிரிக்க மண்ணில் விதைக்கப்பட்ட ஒரு சிறிய விதை… ஆயிரக்கணக்கான மக்களின் விசுவாசத்திற்கு காரணமான மிஷனரி!

Editorial Team October 2, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.