Skip to content
August 18, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தகவல் களஞ்சியம்
  • கட்டுரைகள்
  • Father’s Day – வேதாகமத்தின் படி தகப்பனின் பொறுப்பும் பிள்ளைகளின் கடமையும்
  • கட்டுரைகள்

Father’s Day – வேதாகமத்தின் படி தகப்பனின் பொறுப்பும் பிள்ளைகளின் கடமையும்

Editorial Team July 4, 2026 1 minute read
Happy Father's Day.

Father’s Day – தகப்பனின் மதிப்பும் வேதாகம பார்வையும்

அப்பாக்களை வேதாகமத்தில் பிதா, தகப்பன் என்று பார்க்கிறோம். “அப்பா பிதாவே” என்று அழைக்கும் பாக்கியத்திலிருந்தே நமது ஆவிக்குரிய உறவு ஆரம்பமாகிறது.

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் அவர் பிதாவின் சித்தத்தை செய்து, பிதாவினால் அங்கீகாரம் பெற்று, எல்லா நாமங்களுக்கும் மேலான நாமத்தை பெற்றார். அதே நேரத்தில் உலகத்தில் தம்மை வளர்த்த தகப்பனின் பொறுப்புகளையும் அவர் மதித்தார்.

அப்பா அதிகம் பேசாதவர். சில நேரங்களில் அன்பை வெளிப்படுத்த தெரியாதவர் போல தோன்றலாம். செய்த நன்மைகளை சொல்லிக்காட்டாமல், தன் உழைப்பையும், வாழ்க்கையையும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்திற்காக அர்ப்பணித்து வாழ்பவர்.

கோபமானவர், பாசம் காட்ட தெரியாதவர், பேச தெரியாதவர், கேட்டதை வாங்கித் தராதவர் என்று சில நேரங்களில் பிள்ளைகள் நினைத்தாலும், மொத்த குடும்பத்தின் பாரத்தையும் தன் தோள்களில் சுமந்து அமைதியாக வாழ்பவர் தான் தகப்பன்.

நல்ல ஈவுகளை பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்புபவர். வெளியில் கண்ணீரை காட்டாமல், உள்ளுக்குள் பல பாரங்களை சுமந்து நடப்பவர்.

உயிரோடு இருக்கும் போது பல நேரங்களில் மதிப்பு அறியப்படாமல், மறைந்த பின் அதிகமாக நினைக்கப்படும் ஒரு சிறப்பான உறவு தான் அப்பா.

வேதத்தின் படி தகப்பன் எப்படி இருக்க வேண்டும்?

  1. கர்த்தருக்கு பயப்படும் தகப்பனாக இருக்க வேண்டும்.
    (ஆதியாகமம் 22, சங்கீதம் 128, எபேசியர் 5)
  2. குடும்பத்திற்காக ஆராதனை செய்து ஜெபிக்கும் நபராக இருக்க வேண்டும்.
    (2 நாளாகமம் 25:3-6)
  3. பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் சுபாவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
    (ஆதியாகமம் 27:30-38, 49)
  4. பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்காக ஞானத்தோடு வழிநடத்த வேண்டும்.
    (ஆதியாகமம் 24:38, 28:1-2)
  5. உழைத்து, குடும்பத்தை போஷித்து, பாதுகாத்து, பராமரிக்க வேண்டும்.
    (சங்கீதம் 103:13)
  6. பிள்ளைகளை குறித்து சிந்தித்து, அவர்களின் வாழ்க்கையை அறிந்திருக்க வேண்டும்.
    (ஆதியாகமம் 37:11, 49)
  7. அன்போடு சிட்சித்து, சரியான வழியில் நடத்த தெரிந்திருக்க வேண்டும்.
    (எபிரெயர் 12:9, நீதிமொழிகள் 3:12)
  8. தேவ வசனத்தின் படி மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டும்.
    (1 இராஜாக்கள் 3:6,14)
  9. சத்தியத்தையும், நல்ல ஆலோசனைகளையும் பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும்.
    (1 யோவான் 2:14)
  10. நல்ல சுதந்தரத்தையும், விசுவாசத்தையும், நல்ல பெயரையும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும்.
    (நீதிமொழிகள் 13:22)

தகப்பன் பிள்ளைகளை எப்படி நடத்தக் கூடாது?

  1. எந்த தவறான பழக்கத்திற்கும் அடிமையாக இருக்கக் கூடாது.
  2. பிள்ளைகளிடம் முகம் கோணாமல் நடக்க வேண்டும்.
  3. பிள்ளைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது.
  4. கொடுமை செய்யவோ, தீமை செய்யவோ கூடாது.
  5. அவமானப்படுத்தும் விதமாக நடத்தக் கூடாது.
  6. கோபப்படுத்தி மனதை உடைக்கக் கூடாது.
    (கொலோசெயர் 3:21, எபேசியர் 6:4)
  7. பிள்ளைகளை தேவனை விட மேலாக வைத்து விடக்கூடாது.

பிள்ளைகள் தகப்பனிடம் எப்படி நடக்க வேண்டும்?

  1. தகப்பனின் குறைகளை வெளிப்படுத்தாமல் மரியாதையோடு நடக்க வேண்டும்.
  2. தகப்பனை கனம் பண்ண வேண்டும்.
    (யாத்திராகமம் 20:12)
  3. அன்போடும் மரியாதையோடும் சேவை செய்ய வேண்டும்.
  4. நல்ல ஆலோசனைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும்.
  5. புத்திமதிகளை கேட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    (நீதிமொழிகள் 1:8)
  6. ஆதரித்து, சந்தோஷப்படுத்த வேண்டும்.
  7. அவமானப்படுத்தவோ, காயப்படுத்தவோ கூடாது.
  8. சபிக்கவோ, தவறாக பேசவோ கூடாது.
  9. குடும்பத்தின் மரியாதையை கெடுக்கும் விதமாக நடக்கக் கூடாது.
  10. தகப்பனுக்கு பின் நல்ல சந்ததியாக இருந்து நல்ல பெயரையும், நல்ல அடையாளத்தையும் காத்துக்கொள்ள வேண்டும்.

இந்த Father’s Day-இல் பிரிந்து கிடக்கும் உறவுகளில் தகப்பனின் இருதயத்தை பிள்ளைகளிடமும், பிள்ளைகளின் இருதயத்தை தகப்பனிடமும் கர்த்தர் திருப்புவாராக.

நல்ல ஈவுகளை தரும் பரம பிதாவின் ஆசீர்வாதங்களையும் கிருபையையும் அனைவரும் பெறுவோமாக.

– செலின்

fathers-day-bible-teaching-tamil
வேதாகமத்தின் படி ஒரு தகப்பன் எப்படி வாழ வேண்டும், பிள்ளைகள் தகப்பனை எப்படி கனம் செய்ய வேண்டும் என்பதை விளக்கும் Father’s Day சிறப்பு கிறிஸ்தவ சிந்தனை.

Tags:
Father’s Day Tamil, Christian Father Message, Bible Teaching Tamil, Father Love, Christian Family, Tamil Christian Article, Spiritual Message

Post navigation

Previous: கர்த்தர் சொன்னார் என்ற செய்தியை எப்படி பரிசோதிப்பது?
Next: அரண்மனை எஸ்தர்களே விழித்தெழுங்கள் – விசுவாசம், ஜெபம் மற்றும் பொறுப்பின் அழைப்பு

இதையும் படிக்கலாம்

அரண்மனை எஸ்தர்களே விழித்தெழுங்கள் – விசுவாசம், ஜெபம் மற்றும் பொறுப்பின் அழைப்பு
  • கட்டுரைகள்

அரண்மனை எஸ்தர்களே விழித்தெழுங்கள் – விசுவாசம், ஜெபம் மற்றும் பொறுப்பின் அழைப்பு

Editorial Team July 4, 2026
tn_10 point
  • கட்டுரைகள்

பரிபூரண தேவ சித்தத்தின் ஆராதனையில் இருக்க வேண்டிய பத்து காரியங்கள்

Editorial Team July 4, 2026
tn_worship
  • கட்டுரைகள்

ஹீரோ ஆராதனையில் இருந்து மெய்யான ஆராதனை வழிக்கு திரும்புதல் (Turning From Celebrity Worship Syndrome To Real Worship Pattern)

Editorial Team July 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

  • உலகம்

AI-யின் ‘ஆள்மாறாட்ட’ பிரச்சினை: American Bible Society எச்சரிக்கை

Editorial Team August 18, 2026
afghanistan
  • உலகம்

ஆப்கானிஸ்தானில் கிறிஸ்தவர்கள் இனப்படுகொலை ஆபத்தில்? – மத சுதந்திர நிபுணர் எச்சரிக்கை

Editorial Team August 18, 2026
tcn_MT_Calcutta
  • சாட்சிகள்

வாழ்க்கையின் கடினமான காலத்திற்கும்… ஒரு நோக்கம் இருக்கலாம்

Editorial Team August 13, 2026
NLNL-OfficialTrailer
  • உலகம்

‘No Limbs, No Limits: The NickV Story’ – அடுத்த மாதம் திரையரங்குகளில்

Editorial Team August 13, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.