Skip to content
October 2, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தகவல் களஞ்சியம்
  • கட்டுரைகள்
  • ஹீரோ ஆராதனையில் இருந்து மெய்யான ஆராதனை வழிக்கு திரும்புதல் (Turning From Celebrity Worship Syndrome To Real Worship Pattern)
  • கட்டுரைகள்

ஹீரோ ஆராதனையில் இருந்து மெய்யான ஆராதனை வழிக்கு திரும்புதல் (Turning From Celebrity Worship Syndrome To Real Worship Pattern)

Editorial Team July 4, 2026 1 minute read
tn_worship

திரையில் தோன்றும் ஒருவரின் நடிப்பு, தோற்றம், வார்த்தை, நடை, பாணி மற்றும் வெளிப்பாடுகளை மையமாக வைத்து அவர்களிடம் அளவுக்கு அதிகமான ஈர்ப்பும், பற்றும் உருவாகும் நிலையை Celebrity Worship Syndrome என்று குறிப்பிடுகிறோம்.

இதனால் ஏற்படும் விளைவுகள்:

  1. பிரமை மற்றும் ஆச்சரியம் (Hallucinations)

இது உண்மை மற்றும் யதார்த்தமான காரியங்களை விட, பிரமிப்பு மற்றும் ஆச்சரியம் என்ற மாயைக்குள் மனிதனை இழுத்துச் செல்லும். வெளிப்புற தோற்றங்களையும், ஆச்சரியங்களையும் மட்டுமே மையமாக வைத்தால் உண்மையை அறியும் திறன் குறைந்து விடும்.

வேதாகமத்தில் பிரமித்து நின்ற மக்களை உண்மையின் பக்கம் திரும்ப அழைத்த சம்பவங்களை காண்கிறோம். மெய்யான விசுவாசம் உண்மையின் மேல் கட்டப்பட வேண்டும். மாயை எப்போதும் நிலைத்திருக்காத கானல் நீர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

  1. புனைவு உலகத்தின் மீது அளவுக்கு அதிகமான ஈர்ப்பு (Fictophilia)

சிலர் கற்பனை பாத்திரங்கள் அல்லது பிரபலங்களை தங்கள் வாழ்க்கையின் மையமாக மாற்றிக் கொள்கிறார்கள். உண்மையான உறவுகள், பொறுப்புகள் மற்றும் வாழ்க்கை கடமைகளை புறக்கணித்து கற்பனை உலகில் வாழ ஆரம்பிக்கிறார்கள்.

மனித உறவுகளையும், தேவன் கொடுத்த வாழ்க்கையையும் மதிக்காமல் கற்பனையை நிஜமாக கருதுவது ஆபத்தான பாதைக்கு அழைத்துச் செல்லும்.

  1. உண்மையை உணர முடியாத மனநிலை (Loss of Reality)

இந்த நிலை தொடர்ந்து வளரும்போது, ஒருவர் தன் எண்ணங்களும் உணர்ச்சிகளும் மட்டுமே சரி என்ற நிலைக்கு செல்லக்கூடும்.

உண்மை, ஆலோசனை மற்றும் திருத்தங்களை ஏற்க முடியாத மனநிலை உருவாகும். குடும்பம், உறவுகள் மற்றும் சுற்றியுள்ளவர்களிடமிருந்து விலகும் நிலையும் ஏற்படலாம்.

  1. வெறித்தனமான பற்றுதல் (Obsessive Behaviour)

ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசுதல், அதையே தொடர்ந்து கவனித்தல், வாழ்க்கையின் முக்கியமான பொறுப்புகளை மறந்து ஒரு நபர் அல்லது விஷயத்தை மட்டுமே மையமாக்குதல் போன்ற நிலைகள் உருவாகலாம்.

எந்த காரியமும் தேவனுடைய இடத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கக் கூடாது.

  1. அறநெறி உணர்வு குறைதல்

நன்மை எது, தீமை எது என்பதை சரியாக பகுத்தறியும் திறன் குறையலாம். தவறானவற்றை நியாயப்படுத்துவதும், சரியானவற்றை எதிர்ப்பதும் போன்ற நிலைகள் உருவாகலாம்.

பரிசுத்தத்தையும், உண்மையையும் அறிந்து அதன்படி நடப்பதே கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம்.

  1. அடிமைத்தனமான பற்றுதல்

ஒரு நபர் அல்லது விஷயத்தை இல்லாமல் வாழ முடியாது என்ற அளவுக்கு மனம் சார்ந்து விடும் நிலை ஆபத்தானது.

மனிதனை விட தேவனை மையமாக வைத்த வாழ்க்கையே உண்மையான சமாதானத்தை கொடுக்கும்.

  1. கவலை மற்றும் மனச்சோர்வு

கற்பனை மற்றும் உண்மை இடையே உள்ள வித்தியாசம் புரியும் போது ஏமாற்றம், வருத்தம் மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம்.

அந்த நேரங்களில் மனிதனை அல்ல, மாறாத தேவனை சார்ந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

இதிலிருந்து விடுபட்டு மெய்யான தேவனை எப்படி ஆராதிப்பது?

  1. நமது விசுவாசம் குறித்து சரியான புரிதல் வேண்டும்

நாம் நம்புகிற காரியங்கள் குறித்து தெளிவு வேண்டும். எது நிலையானது, எது நிலையற்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் மாறக்கூடியவன்; ஆனால் தேவன் மாறாதவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

  1. கர்த்தரை சார்ந்த தெரிவு இருக்க வேண்டும்

கர்த்தர் பரிசுத்தர். அவர் நீதியிலும் உண்மையிலும் செயல்படுகிறவர்.

ஒருவர் கிறிஸ்தவ அடையாளம் வைத்திருப்பதால் மட்டும் அவரை கண்மூடித்தனமாக பின்பற்றாமல், அவருடைய வாழ்க்கையின் கனிகளை பார்த்து அறிய வேண்டும்.

  1. மனந்திரும்புதல் அவசியம்

பிரமிப்பு, ஆச்சரியம், உணர்ச்சி ஆகியவற்றை மட்டுமே மையமாக வைத்து வாழாமல் நிதானத்தோடு வாழ வேண்டும்.

இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவர் நடந்த தாழ்மையான பாதையை பின்பற்றும் மனநிலை நமக்கு வேண்டும்.

  1. சாந்தமாக போதித்து வழிநடத்த வேண்டும்

இப்படிப்பட்ட நிலைகளில் இருப்பவர்களை வெறுத்து ஒதுக்காமல், அன்போடும் பொறுமையோடும் உண்மையை எடுத்துரைக்க வேண்டும்.

சரியான போதனை, தேவ வார்த்தை மற்றும் பக்தி வளர்ச்சியின் மூலம் அவர்களை வழிநடத்த வேண்டும்.

ஒரு மனிதனை அல்லது உலக காரியங்களை அளவுக்கு அதிகமாக உயர்த்தி, அவற்றில் நம் அடையாளத்தையும் மகிழ்ச்சியையும் தேடுவது சரியான வழி அல்ல.

ஊசியா ராஜா மரித்த வருடத்தில் ஏசாயாவின் கண்கள் திறக்கப்பட்டது போலவும், பத்மு தீவில் யோவானுக்கு தேவ மகிமை வெளிப்பட்டது போலவும், சர்வ வல்லவர் யார் என்பதை அறியும் ஆவிக்குரிய கண்களை கர்த்தர் நமக்கு தருவாராக.

ஆராதனையும் மகிமையும் கர்த்தருக்கே உரியது.

நாம் யாரோடு நம்மை அடையாளப்படுத்துகிறோம், எதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்பதே நம்முடைய உண்மையான நிலையை காட்டுகிறது.

நம்மை நாமே தாழ்த்தி, பொல்லாத வழிகளை விட்டு விலகி, நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக தாழ்மைப்படுவோம்.

கிருபை உண்டாவதாக!

– செலின்

Celebrity Worship Syndrome எனப்படும் மனிதர்களை அளவுக்கு அதிகமாக உயர்த்தும் மனநிலையிலிருந்து விலகி, உண்மையான தேவ ஆராதனை மற்றும் கிறிஸ்துவை மையமாக கொண்ட வாழ்க்கைக்கு திரும்ப வேண்டிய அவசியத்தை விளக்கும் ஆவிக்குரிய கட்டுரை.

Tags:
Christian Life, True Worship, Celebrity Worship Syndrome, Jesus Christ, Tamil Christian Message, Spiritual Awareness, Faith, Christian Devotional

Post navigation

Previous: நாம் பிரசங்கிக்கத் தவறியவை
Next: பரிபூரண தேவ சித்தத்தின் ஆராதனையில் இருக்க வேண்டிய பத்து காரியங்கள்

இதையும் படிக்கலாம்

அரண்மனை எஸ்தர்களே விழித்தெழுங்கள் – விசுவாசம், ஜெபம் மற்றும் பொறுப்பின் அழைப்பு
  • கட்டுரைகள்

அரண்மனை எஸ்தர்களே விழித்தெழுங்கள் – விசுவாசம், ஜெபம் மற்றும் பொறுப்பின் அழைப்பு

Editorial Team July 4, 2026
Happy Father's Day.
  • கட்டுரைகள்

Father’s Day – வேதாகமத்தின் படி தகப்பனின் பொறுப்பும் பிள்ளைகளின் கடமையும்

Editorial Team July 4, 2026
tn_10 point
  • கட்டுரைகள்

பரிபூரண தேவ சித்தத்தின் ஆராதனையில் இருக்க வேண்டிய பத்து காரியங்கள்

Editorial Team July 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

Editorial Team September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026
போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்! ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

September 9, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

love
  • தலைப்பு பிரசங்கங்கள்

அன்பே கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம்

Editorial Team October 2, 2026
Grace
  • வேதபகுதி பிரசங்கங்கள்

என் கிருபை உனக்குப் போதும்!

Editorial Team October 2, 2026
moses
  • வேதபகுதி பிரசங்கங்கள்

அவர் உனக்காக யுத்தம் செய்வார்!

Editorial Team October 2, 2026
david flood
  • வரலாறுகள்

டேவிட் ஃப்ளட்: ஆப்பிரிக்க மண்ணில் விதைக்கப்பட்ட ஒரு சிறிய விதை… ஆயிரக்கணக்கான மக்களின் விசுவாசத்திற்கு காரணமான மிஷனரி!

Editorial Team October 2, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.