Skip to content
October 9, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • தாக்குவதற்கு அல்ல, தாங்குவதற்கே
  • தியான செய்திகள்

தாக்குவதற்கு அல்ல, தாங்குவதற்கே

Editorial Team July 8, 2026 1 minute read
tn_8

ஸ்டான்லி என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பா ர்வையாளராகப் பணியாற்றி வந்தார். திறமையானவராக இருந்தாலும், மற்றவர்களை கேலி செய்து பேசுவது அவரது பழக்கமாக இருந்தது. அவருடைய வார்த்தைகள் பலரையும் சிரிக்க வைத்தாலும், சிலரின் மனங்களை அமைதியாக காயப்படுத்திக் கொண்டே இருந்தன.

ஒருநாள், வழக்கம்போல் சக பணியாளர்களுடன் மதிய உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் தன் மேலாளரைப் பற்றிக் கேலியாகவும் இழிவாகவும் பேசத் தொடங்கினார். அவரது வார்த்தைகள் எல்லையைத் தாண்டி யதால், அங்கு இருந்த சிலர் அதிருப்தியடைந்தனர். அந்தச் சம்பவம் விரைவில் மேலாளரின் காதிற்கும் எட்டியது.

உடனே மேலாளர், ஸ்டான்லியை தனது அலுவலக அறைக்கு வரவழைத்தார். அமைதியாக அவர் கேட்டார்: “நீங்கள் என்னைப் பற்றி இழிவாகப் பேசியது உண்மையா?” ஸ்டான்லி தயக்கத்துடன், “ஆமாம் ஐயா, என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கூறினார்.

அதற்கு மேலாளர் கடுமையாக எச்சரித்தார்: “நீங்கள் எதைப் பேச வேண்டுமானாலும் என் முன்னிலையில் நேராகப் பேசுங்கள். ஆனால் பின்னால் இருந்து இழிவாகப் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல் மீண்டும் தொடர்ந்தால், ஆபத்தான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.”
இந்த வார்த்தைகள் ஸ்டான்லியின் மனதை ஆழமாகப் புண்படுத்தின. அவமானத்துடன் அவர் அறையை விட்டுவெளியே வந்தார். அன்று முழுவதும் அவர் மன அமைதியின்றி இருந்தார். தன் தவறை உணர்ந்தாலும், மனத்தில் ஒரு கனமான சுமை தங்கியிருந்தது.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஸ்டான்லி, தனது அறையில் அமைதியாக அமர்ந்து நடந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார். அதை கவனித்த அவரது மனைவி, என்ன நிகழ்ந்தது என்று கேட்டார்.

அவர் நடந்ததை முழுமையாகச் சொன்னார். கவனமா கக் கேட்ட மனைவி மெதுவாகக் கூறினாள்: “நீங்கள் செய்த து தவறு. ஆனால் அதை நீங்கள் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளீர்கள். இருந்தும் மனம் அமைதியில்லை என்றால், உங்கள் அறையை ஜெப அறையாக்குங்கள். தேவனிடம் மனம் திறந்து பேசுங்கள். மன்னிப்பின் உறுதியை அவர் தருவார்.”

இந்த ஆலோசனை ஸ்டான்லிக்கு புதிய ஒளியைத் தந்தது. உடனே அவர் முழங்காலில் மண்டியிட்டு ஜெபித்தார்: “கர்த்தாவே, நான் தவறு செய்தேன். என் வார்த்தைகளால் பலரின் மனதைப் புண்படுத்தியுள்ளேன். என்னை மன்னியுங் கள். இனிமேல் யாரையும் கேலி செய்யாமல், அவர்களின் மனதை மதிக்கும் வாழ்க்கையை நடத்துவேன். நான் காயப்படுத்திய அனைவரிடமும் சமாதானமாக இருப்பதற்கு எனக்கு உதவுங்கள்.”

இந்த உண்மையான மனமாற்றத்தின் ஜெபத்துக்குப் பின், அவரது உள்ளத்தில் ஒரு ஆழ்ந்த சமாதானம் நிலவத் தொடங்கியது. மனம் இலகுவானது. அடுத்த நாள் ஸ்டான்லி அலுவலகத்திற்கு புதிய உற்சாகத்துடன் சென்றார். முன்னாள் ஸ்டான்லியிலிருந்து மாறுபட்டவர் போல இருந்தார். அவர் முன்பு தன் வார்த்தைகளால் யாரை யாரை காயப்படுத்தியிரு ந்தாரோ, அவர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று மன்னிப்பு கேட்டார். சிலர் ஆச்சரியப்பட்டனர்; மகிழ்ந்தனர்; ஆனால் அனைவரும் அவரது மாற்றத்தை உணர்ந்தனர். அவரது வாழ்க்கை அந்த நாளிலிருந்து புதிய திசையை எடுத்தது.

இறைமக்களே, ஒருவரை “கேலி” என்ற பெயரில் இழிவுபடுத்துவது சரியா? ஒருவரின் உடல் அமைப்பையோ, குறைகளையோ, இயலாமைகளையோ சிரிப்பிற்கான பொரு ளாக மாற்றுவது மனிதநேயமா? நம் மகிழ்ச்சிக்காக மற்றொரு வரின் மனதை காயப்படுத்துவது, சகோதர அன்பிற்கு முற்றிலும் எதிரானது. ஒருவர் முன்னிலையில் ஒரு பேச்சு, அவரில்லாதபோது வேறு பேச்சு. இது உண்மையான மனித நேயமல்ல.

இறைவேதம் இவ்வாறு அறிவுறுத்துகிறது:

“மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சி உண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!” (நீதிமொழிகள் 15:23)

“மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்” (நீதி.12:25)

நாம் அனைவரும் ஒரே மனிதக்குடும்பத்தைச் சேர்ந்த சேர்ந்த ஒருதாய் பிள்ளைகள்தான். சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம் போன்ற வேறுபாடுகளைத் தாண்டி, ஒருவரை ஒருவர் மதிக்கும் மனப்பாங்கு நமக்குள் வளர வேண்டும்.

நம் வார்த்தைகள் ஒரு ஆயுதமாக இருக்கலாம்; அதே நேரத்தில், அது ஒரு மருந்தாகவும் இருக்கலாம். எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம்மிடமே இருக்கிறது. நம் வார்த்தைகள் தாக்குவதற்கு அல்ல – தாங்குவதற்கே.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: பெற்றோரின் மதிப்பு
Next: இதயம் காணும் இறைவன்

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

king
  • வேதாகம மனிதர்கள்

சவுல் – இஸ்ரவேலின் முதல் ராஜா

Editorial Team October 5, 2026
சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன் samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

Watchman Nee
  • கவிதைகள்

ஜெபமும் ஆவிக்குரிய போராட்டமும் குறித்து 10 ஆழமான கருத்துகள்

Editorial Team October 8, 2026
women touch jesus
  • வேதபகுதி பிரசங்கங்கள்

தொட்டால் போதும் — விசுவாசம் விடுதலையைப் பெற்றது!

Editorial Team October 7, 2026
caananite women
  • வேதபகுதி பிரசங்கங்கள்

விடாமல் மன்றாடு — விசுவாசம் விடை பெறும்!

Editorial Team October 7, 2026
forgiveness
  • தலைப்பு பிரசங்கங்கள்

மன்னியுங்கள்; விடுதலை பெறுங்கள்!

Editorial Team October 7, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.