Skip to content
October 8, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • இதயம் காணும் இறைவன்
  • தியான செய்திகள்

இதயம் காணும் இறைவன்

Editorial Team July 8, 2026 1 minute read
tn_9

ஒரு இளைஞன் உயர்கல்வி முடித்திருந்தான். பி.ஏ. பட்டம் பெற்றிருந்தாலும், தனது படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவன் மிகவும் கஷ்டப்பட்டான். பல இடங்க ளில் முயன்றும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. இறுதி யில், “வேலை இல்லாமல் இருப்பதற்குப் பதிலாக கிடைத்த வேலையை ஏற்றுக் கொள்வதே மேல்” என்று முடிவு செய்தான்.

அவ்வாறு அவனுக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனியில் வேலை கிடைத்தது. அவன் எதிர்பார்த்த வேலை அல்ல அது. இருந்தாலும் வாழ்க்கையின் அவசியம் அவனை அந்த வேலை யை ஏற்க வைத்தது. அந்த சர்க்கஸில் இருந்த கரடி ஒன்று இறந்துவிட்டதால், அந்த கரடியின் வேஷத்தை அணிந்து மக்களை மகிழ்விப்பது தான் அவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

முதல் நாள் அவன் தயக்கத்துடன் அந்த வேலையை தொடங்கினான். கரடியின் தோலை அணிந்து அரங்கில் களமிறங்கினான். சைக்கிள் ஓட்டியும், சாகசங்கள் செய்தும் மக்களை மகிழ்வித்தான். பார்வையாளர்கள் கைத்தட்டினர். நாட்கள் இவ்வாறு நகர்ந்தன.

ஒருநாள் அவன் தனது நிகழ்ச்சியை முடித்துவிட்டு, கரடி வேஷத்திலேயே கூண்டுக்குள் ஓய்வெடுத்து கொண்டிருந் தான். அப்போது திடீரென்று ஒரு கருங்குரங்கு அந்தக் கூண்டு க்குள் குதித்தது. அதை பார்த்தவுடன் அவன் பயந்து போனான். தப்பிக்க முயன்று கூச்சலிட்டான்.

அப்போது அந்தக் குரங்கு அவனை பிடித்து, “பயப் படாதே!” என்று சொன்னது. குரங்கு பேசுவதைக் கேட்டதும் அவன் அதிர்ச்சியடைந்தான். என்ன நடக்கிறது என்று அவனுக்கு புரியவில்லை.

அந்தக் குரங்கு மெதுவாகச் சொன்னது: “நீ பி.ஏ. படிச்சிட்டு கரடி வேஷம் போட்டிருக்கே, நான் எம்.ஏ. படிச்சிட்டு குரங்கு வேஷம் போட்டிருக்கேன்!” அந்த ஒரு வாக்கியம் அவனை சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தது.

இந்த சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான உண்மை யை கற்றுக்கொடுக்கிறது. இன்றைய உலகில் பலர் தங்கள் உண்மையான நிலையை மறைத்து, வேஷம் போட்டுக் கொண்டு வாழ்கிறார்கள். நாம் அவர்களின் வெளிப்புற தோற்ற த்தைப் பார்த்து மதிப்பிடுகிறோம். ஆனால் அவர்களின் உள்ளத்தின் உண்மையை அறிய முயற்சிப்பதில்லை.

இறைவேதம் கூறுகிறது: “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (1 சாமுவேல் 16:7).

மனிதர்கள் வெளிப்புறத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் தேவன் உள்ளத்தைப் பார்க்கிறார். உலகத்தில் நாம் காணும் அழகு, பேச்சு, வெளிப்புற நடத்தை இவை அனைத் தும் ஒருவரின் உண்மையான குணத்தை வெளிப்படுத்தாது. சிரிப்பின் பின்னால் வலி இருக்கலாம். இனிய வார்த்தைகளின் பின்னால் போலித்தனம் இருக்கலாம். சாதாரண தோற்றத்தின் பின்னால் உயர்ந்த உள்ளம் இருக்கலாம்.

ஆகையால் நாம் வெளிப்புறத்தை வைத்து தீர்ப்பு வழங்காமல், உள்ளத்தை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு முன், நாம் உண்மையானவர்களாக வாழ வேண்டும். போலியான உறவுகள் நீடிக்காது. உண்மையான உறவுகள் மட்டுமே நிலைத்திருக்கும்.

தேவன் நம்மை வெளிப்புறமாக அல்ல, உள்ளத்தின் உண்மையை வைத்து நேசிக்கிறார். அதுபோல நாமும் மனதை காண கற்றுக்கொள்ள வேண்டும். வேஷத்தை விட உண்மை மேலானது. மனதை அறிந்தால் மனிதனை உண்மை யாக அறிய முடியும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: தாக்குவதற்கு அல்ல, தாங்குவதற்கே
Next: மனதில் தீபமேற்றுவோம்!

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

king
  • வேதாகம மனிதர்கள்

சவுல் – இஸ்ரவேலின் முதல் ராஜா

Editorial Team October 5, 2026
சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன் samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

Watchman Nee
  • கவிதைகள்

ஜெபமும் ஆவிக்குரிய போராட்டமும் குறித்து 10 ஆழமான கருத்துகள்

Editorial Team October 8, 2026
women touch jesus
  • வேதபகுதி பிரசங்கங்கள்

தொட்டால் போதும் — விசுவாசம் விடுதலையைப் பெற்றது!

Editorial Team October 7, 2026
caananite women
  • வேதபகுதி பிரசங்கங்கள்

விடாமல் மன்றாடு — விசுவாசம் விடை பெறும்!

Editorial Team October 7, 2026
forgiveness
  • தலைப்பு பிரசங்கங்கள்

மன்னியுங்கள்; விடுதலை பெறுங்கள்!

Editorial Team October 7, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.