யோவான் 8: 1 – 9
1. இயேசு ஒலிவமலைக்குப் போனார்.
2. மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.
3. அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
4. போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
5. இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
6. அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
7. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
8. அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
9. அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள்.
கேள்வி 1 : ஏன் இயேசுவை சோதிக்கும்படி சொன்னார்கள்,
கேள்வி 2 : ஏன் இயேசு விரலினால் எழுதினார்
கேள்வி 1 : ஏன் இயேசுவை சோதிக்கும்படி சொன்னார்கள்,
இஸ்ரவேல் தேசம் முழுவதும் இயேசுவின் காலத்தில் ரோமர்களின் ஆட்சியில் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது அந்த காலத்தில் ரோமர்களால் ஒரு சட்டம் இயற்றப்பட்டது என்னவென்றால் இஸ்ரவேலர்கள் எந்த ஒரு தனி மனிதனுக்கும் மரண தண்டனை விதிக்க அனுமதி இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் மரண தண்டனைக்குட்படுவானாகில் அவனை ரோமர்கள் இடத்தில் கொண்டு போக வேண்டும் எனவும் சட்டம் இயற்றப்பட்டிருந்தது
உதாரணத்திற்கு யுதர்கள் இயேசுவை கொலை செய்ய தீர்மானித்தது போது நடந்தது என்ன
யோவான் 18:31 – அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.
இங்கே அந்தப் பெண் கொல்லப்பட வேண்டும் என்றால் இயேசு ரோமர்களுடைய சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார் என்று சொல்வார்கள்.இங்கே இந்தப் பெண் கொல்லப்படக்கூடாது என்றால் இவர் மோசேயின் நியாயப்பிரமாணத்தை புறக்கணிக்கிறார், இவர் மேசியா அல்ல, கள்ளத்தீர்க்கதரிசி என்று சொல்வார்கள்.
ஆகவே இப்பொழுது இயேசு அந்தப் பெண் கொல்லப்பட வேண்டும் என்று சொன்னாலும் பிரச்சனை கொல்லப்படக்கூடாது என்று சொன்னாலும் பிரச்சனை இந்த சூழலில் தான் இயேசுவை சோதிக்கும் படியாக குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு காரியத்தை செய்கிறார்கள்
இங்கே இயேசு என்ன பதில் சொல்வார் என்று காதிதிருக்கிறார்கள்
பதில் : இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். 7. அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, 8. அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள்.
ஏன் போய்விட்டார்கள்? அப்படி அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? என்ன பாவம் காணப்பட்டது?
1 யோவான் 3:4 – பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
யூதர்கள் மிக உறுதியாக தெரிந்திருந்த ஆளமாக ஆணித்தரமாக கடைப்பிடிக்கிறதான ஒரு வசனம் இது இவர்கள் நியாயப்பிரமாண காரியங்களில் மிக கவனமாய் தெளிவோடு இருப்பார்கள்
இப்பகுதியில் கொடுக்கப்பட்ட பிரமாணம் என்ன?
உபாகமம் 22:22 – புருஷனுக்கு விவாகம்பண்ணப்பட்ட ஸ்திரீயோடே ஒருவன் சயனிக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரீயும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.
மோசேயின் பிரமாணத்தின் படி விபச்சாரத்தில் ஈடுபட்ட மனிதனும் ஸ்திரியும் சாக வேண்டும்
ஆனால் இங்கே என்ன நடக்கிறது பாpசேயர்களும் வேதபாரகரும் இயேசுவுக்கு முன்பாக கொண்டு வந்து நிறுத்தியது விபச்சாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்திரீயை மட்டுமே
3.அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: 4. போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
மோசேயின் பிரமாணத்தின் படி விபச்சாரத்தில் ஈடுபட்ட மனிதனும் ஸ்திரியும் சாக வேண்டும்
விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீ என்றால் விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனிதன் எங்கே என்ற கேள்வி வருகிறது
இங்கே விபச்சார கல்லணை விட்டுவிட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஸ்திரியை மட்டும் கொண்டு வந்து இயேசுவுக்கு முன்னிறுத்தி இயேசுவை சோதிக்கும் படியாக குற்றம் கண்டுபிடிக்கும் படியாக இப்படி ஒரு கேள்வியை கேட்கிறார்கள்
இதுதான் அவர்கள் செய்த முதல் பாவம் என்ன பாவம்? நியாயப்பிரமாணத்தை மீறியது
இரண்டாவது பாவம் பொய் சொன்னார்கள் என்ன பொய் சொன்னார்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கல்லணை விட்டுவிட்டு விபச்சாரத்த்pல் ஈடுபட்டிருந்த ஸ்திரீயை மட்டும் பிடித்தோம் என்றார்கள்
முதல் பாவம் பிரமாணத்தை மீறியது, இரண்டாவது பாவம் பொய் சொன்னது
இங்கே பரிசேயர்களுக்கும் வேதபாரகர்களுக்கும் நாம் செய்திருப்பது தவறு அல்லது நாம் பாவம் செய்திருக்கிறோம் என்று தெரியுமா இல்லையா அவர்களுக்கு நல்லாவே தெரியும் பாவம் செஞ்சிருக்கோம்னு
இங்கே ஆண்டவர் அவர்களைப் பார்த்து கேட்கிறார் உங்களில் யாhpடத்தில் பாவம் இல்லையோ என்கிற வார்த்தை பயன்படுத்துகிறார் அப்பொழுதுதான் இவர்கள் மனதில் குத்தப்படுகிறார்கள் நாம் பொய் சொல்லி இருக்கிறோம் பிரமாணத்தை மீறி இருக்கிறோம் இன்று இருதயத்தில் குத்துண்டவர்களாய் கற்களை கீழே போட்டுவிட்டு போய்விட்டார்கள்
கேள்வி 2 : ஏன் இயேசு விரலினால் எழுதினார்
பொதுவாக நாம் மனல் மீது தரையில் எழுதனும்னா எத வச்சு எழுதுவோம் ஒரு குச்சியை வைத்து எழுதுவோம் இல்லனா கல்லை வைத்து எழுதுவோம் ஆனால் இங்கே இயேசு விரலினால் எழுதினார் என்று அந்த விரல் என்கிற வார்த்தை அழுத்தமாக எழுதி இருக்கிறதை பார்க்க முடியும் ஏன் விரல் என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால்
யாத்திராகமம் 31-18 ல் சீனாய் மலையில் அவர் மோசையோட பேசி முடிந்த பின் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பனைகள் ஆகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்
இங்கே தேவன் தம் மக்களுக்கு பிரமாணத்தை எப்படி கொடுத்தார் என்றால் தம்முடைய விரலினால் எழுதிக் கொடுத்தார் என்பதை பார்க்கிறோம்
யோவான் புத்தகத்தில் நாம் பார்க்கும் பொழுது இங்கேயும் தன் விரலினால் எழுதினால் என்று எழுதப்படுவதை நாம் பார்க்கிறோம்.
இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இயேசு தரையில் தன் விரலினால் எழுதும் பொழுது அன்றைக்கு எப்படி என் விரலினால் நியாயப்பிரமாணம் எழுதப்பட்டது அதேபோல இன்றைக்கும் என்னுடைய விரலினால் உங்களுக்கு முன்பதாக நான் எழுதுகிறேன் என்பதை காட்டும் படியாக நான் அன்றைக்கு இருந்த அதே தேவன் என்பதை நிரூபிக்கும் படியாக
மோசைக்கு நான் கொடுத்த என்னுடைய கட்டளைகளை வைத்து என்னை சோதிக்கும்படி என்னிடத்தில் வந்திருக்கிறீர்களா பரிசேயர்களை வேதபாரர்களே என்று சொல்லி அவர்களுக்கு அடையாளமாய் நானே தேவன் என்பதை நிரூபிக்கும் படியாக தரையில் தன் விரலினால் எழுதுகிறார்
என்ன எழுதிருப்பார்? முந்தின அதிகாரத்தில்
யோவான் 7ம்அதிகாரம் தேவாலயத்தில் பிரசங்கம் பண்ணுகையில்
37. பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.
38. வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
அவர் மேல் விசுவாசமாய் இருக்கிறவர்களுடைய உள்ளத்திலிருந்து ஜீவநதிகள் ஓடும் என்று சொல்லுகிறார் அதாவது உயிருள்ள நீரூற்று அவர்களிடத்தில் இருந்து புறப்படும் என்று
இந்த சம்பவத்தை தேவாலயத்தில் பிரசங்கித்த பின்பு அடுத்த அதிகாரத்தில் இந்த சம்பவத்தை நாம் பார்க்கிறோம் ஸ்திரியை கொண்டு வந்து என்ன செய்ய வேண்டும் போதகரே என்று சொல்லி
இயேசு தரையில் எழுதினார் என்பதற்கு பழைய ஏற்பாடு புத்தகத்தில் சொல்லப்பட்ட ஒரு தீர்க்கதாpசன வசனத்தின் நிறைவேறுதலாக இங்கே இருக்கிறது
எரேமியா 17:13 இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே உம்மை விட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள் அவர்கள் ஜவனுள்ள தண்ணீரின் ஊச்சாகிய கர்த்தரை விட்டு விலகி போனபடியால் உம்மை விட்டு அகன்று போகிற அவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்
உயிருள்ள நீரூற்று யார் என்றால் இயேசு
இங்கு சொல்லப்பட்ட வசனத்தையும் யோவான் 7,8. அங்கே சொல்லப்பட்ட வசனங்களையும் பார்க்கும் பொழுது இந்த உயிருள்ள நீர் உற்சாகிய இயேசுவை புறக்கணிக்கிறவர்கள் பெயர் புழுதியில் எழுதப்படும் என்று சொல்லி எரேமியா புத்தகத்தில் வாசிக்கிறோம்
இயேசு மறுபடியும் குனிந்து தரையில் எழுதினார் என்ற வார்த்தையை பார்க்கும் பொழுது என்ன எழுதி இருக்கக் கூடும் என்றால் அங்கே நின்று கொண்டிருந்த இயேசுவே புறக்கணிக்கிற நியாயப்பிரமாணத்தை புறக்கணிக்கிற இந்த பரிசேயர்கள் வேதபாரர்களுடைய பெயர்களை அவர் எழுதி இருக்கக்கூடும்
ஆனால் யோவான் புத்தகத்தில் அவர் எழுதும்போது இயேசு என்ன எழுதினார் என்று குறிப்பிடப்படவில்லை
ஆனால் எரேமியாவில் சொல்லப்பட்ட வார்த்தையின் நிறைவேறுதலாக தான் இங்கே இந்த சம்பவம் நடைபெறுகிறது
இந்த வேத பாட வகுப்பு மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பகுதி என்னவென்றால் ஜீவத்தண்ணீரின் ஊட்சாகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும் பொழுது யோவான் 7:37 ல் சொல்லப்பட்டது போல ஜீவ தண்ணீர் உள்ள ஊற்றுகள் எலும்பும்
இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய நன்மைகளும் ஆசீர்வாதங்களும் கிருபைகளும் வரங்களும் அபிஷேகங்களும் வெளிப்பட வேண்டும் என்றால், உள்ளத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு காரியம் அந்த ஜீவத் தண்ணீரின் ஊச்சாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் இருக்க வேண்டும்