Skip to content
August 24, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • அடையாளத்தை அறியாத கழுகு
  • தியான செய்திகள்

அடையாளத்தை அறியாத கழுகு

Editorial Team July 10, 2026 1 minute read
tn_28

ஒரு நாள், ஒரு மனிதன் கழுகின் ஒரு முட்டையை எடுத்துக் கொண்டு, அதை கோழி முட்டைகளுடன் சேர்த்து வைத்தான். காலம் கடந்தது. அந்த முட்டைகள் அனைத்தும் பொறிந்து, குஞ்சுகள் வெளியே வந்தன. அவற்றுடன் சேர்ந்து அந்தக் கழுகு குஞ்சும் வெளிவந்தது.

அந்தக் கழுகு குஞ்சு, கோழிக் குஞ்சுகளுடன் சேர்ந்து வளரத்தொடங்கியது. அவற்றைப் போலவே நடந்தது. அவற்றைப் போலவே தானியங்களையும் புழுக்களையும் தின்றது. தரையில் மட்டுமே சுற்றித் திரிந்தது. அது ஒருபோதும் மேலே பார்க்கவில்லை; பறக்க முயற்சிக்கவும் இல்லை. ஏனெனில் அது தன்னை ஒரு கோழி என்று நினைத்துக்கொண்டது.

ஒருநாள், வானத்தில் உயரமாக பறந்துகொண்டிருந்த ஒரு கழுகு, கீழே கோழிகளின் நடுவில் இருந்த அந்தக் கழுகு குஞ்சை கவனித்தது. தன் இனத்தைச் சேர்ந்த ஒன்று தன் உயரத்தை அறியாமல் கீழே உலாவுவதைப் பார்த்து அது ஆச்சரியமடைந்தது. அது உடனே கீழிறங்கி, அந்தக் குஞ்சை நோக்கி,

“நீ ஒரு கோழி அல்ல! நீ ஒரு கழுகு. வானத்தில் உயர்ந்து பறக்க வேண்டியவன். ஏன் இங்கே குப்பை மேட்டில் தானியங்களைத்தேடி அலையுகிறாய்? என்னோடு வா; உன்னை வானத்தில் பறக்க வைக்கிறேன்” என்று அழைத்தது. ஆனால் அந்தக் கழுகு குஞ்சு பயந்துபோய், “நான் ஒரு கோழிக் குஞ்சு தான். நீ என்னை ஏமாற்றி சாப்பிட முயற்சிக்கிறாய். உன் வார்த்தைகளை நான் நம்ப மாட்டேன்” என்று கூறியது. பின்னர் அது மீண்டும் கோழிக் குஞ்சுகளோடு சேர்ந்து ஓடி ஒளிந்தது. இவ்வாறு, அது தன் உண்மையான அடையாளத்தை ஏற்க மறுத்தது. உயரத்திற்கு அழைக்கப்பட்டும் தாழ்விலேயே தங்கி விட்டது.

இறைமக்களே, இந்தக் கதை நம் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. தேவன் நம்மை உயர்ந்த நோக்கங்களுக் காக படைத்திருக்கிறார். ஆனால் நாம் வளர்ந்த சூழ்நிலைக ளை பார்த்து, “என் வாழ்க்கை இதுவரை தான்” என்று நாமே நமக்கு எல்லை விதித்துக் கொள்கிறோம்.

நாம் யார் என்பதை அறியாதவரை, நம் வலிமையை உணராதவரை, மற்றவர்களின் கருத்துகளுக்கும் சூழ்நிலைக ளுக்கும் அடிமையாகி விடுவோம். நாம் நம்மை குறைவாக எண்ணினால், உயர்ந்த வாழ்க்கையை அடைய முடியாது.

கிறிஸ்துவுக்குள் நாம் யார் என்பதை அறிதல் மிகவும் முக்கியமானது. உலகம் நம்மைப் பற்றி என்ன சொல்கிறது என்பதல்ல முக்கியம்; தேவன் நம்மைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதே உண்மை.
இறைவேதம் இவ்வாறு அறிவுறுத்துகிறது:

“பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்” (கொலோ. 3:2)

ஆகையால், உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடா தீர். சூழ்நிலைகளால் கட்டுப்படாதீர். உங்கள் உண்மையான திறனை உணருங்கள். உயர்ந்த நோக்கத்துடன் வாழுங்கள்.

நீங்கள் கோழி அல்ல, பறக்க படைக்கப்பட்டவர்கள்.
உங்கள் அடையாளத்தை அறிந்தால், உங்கள் உயரம் மாறும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: மனவியாதிக்கு தீர்வு வேண்டும்
Next: உறவுகளை காக்கும் ஆற்றல்

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026
தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன் david
  • வேதாகம மனிதர்கள்

தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன்

August 24, 2026
ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

August 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?
  • கேள்வி பதில்கள்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?

Editorial Team August 24, 2026
அந்நிய பாஷை உண்மையா?
  • கேள்வி பதில்கள்

அந்நிய பாஷை உண்மையா?

Editorial Team August 24, 2026
Jonah
  • தலைப்பு பிரசங்கங்கள்

யோனா புத்தகத்தில் தேவன் பயன்படுத்திய காரியங்கள் (சூழ்நிலை)

Editorial Team August 24, 2026
true-worship
  • வேதபகுதி பிரசங்கங்கள்

ஆகூரின் இரண்டு மனுக்கள்

Editorial Team August 24, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.