Skip to content
October 9, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • உறவுகளை காக்கும் ஆற்றல்
  • தியான செய்திகள்

உறவுகளை காக்கும் ஆற்றல்

Editorial Team July 10, 2026 1 minute read
tn_29

ஒரு தம்பதியரின் திருமணம் மகிழ்ச்சியாக நடைபெற் றது. உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடிய அந்த நிகழ்வு, அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய ஆரம்பமாக அமைந்தது. மணமேடையில் அவர்கள் இருவரும் புன்னகையுடன் அமர்ந்திருந்தனர். எதிர்கால கனவு கள், ஆசைகள், நம்பிக்கைகள் அந்த ஒரு தருணத்தில் கலந்திருந்தது.

அந்த சந்தோஷமான சூழலில், திடீரென ஒரு சிறிய சம்பவம் நடந்தது. ஒரு எலி மேடையின் ஓரமாக வேகமாக ஓடி மறைந்தது. அதை கவனித்த மாப்பிள்ளை, மணப்பெண் ணை நோக்கி மெதுவாக, “அந்தப் பக்கம் எலி ஓடியதை பார்த்தாயா?” என்று கேட்டார்.

மணப்பெண் உடனே பதிலளித்தாள்: “ஆம், பார்த்தேன். ஆனால் அந்தப் பக்கம் இல்லை, இந்தப் பக்கம் தான் ஓடியது.” மாப்பிள்ளை சிரித்தபடி, “இல்லை, நான் தெளிவாக பார்த்தேன்; அது அந்தப் பக்கம் தான் ஓடியது” என்றார்.

மணப்பெண் மீண்டும் வலியுறுத்தினாள்: “இல்லை, நான் பார்த்தது சரிதான்; அது இந்தப் பக்கம் தான் ஓடியது.”

இந்தச் சிறிய கருத்து வேறுபாடு சில நொடிகளில் வாக்குவாதமாக மாறியது. ஆரம்பத்தில் சிரிப்புடன் இருந்த உரையாடல், மெதுவாக உறுதியான வாதமாக மாறியது. இருவரும் தங்கள் கருத்தை நிரூபிக்க முயன்றனர். யாரும் ஒருவருக்கொருவர் இடம் கொடுக்கத் தயங்கவில்லை.

அங்கு இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஒரு எலி எந்த திசையில் ஓடியது என்ற சிறிய விஷயம், அவர்களின் மனநிலையை பாதிக்கும் அளவுக்கு வளர்ந்தது. அந்த ஒரு சிறிய விஷயம், அவர்களின் உறவில் ஒரு சின்ன விரிசலை உருவாக்கியது.

அந்த விரிசல் அங்கேயே முடிந்துவிட்டதா? இல்லை. அந்த நாளின் சிறிய வாக்குவாதம், பின்னர் பெரிய மனக் கசப்புகளுக்குக் காரணமாகியது என்று கூறப்படுகிறது. புரிதல் இல்லாமை, பிடிவாதம், விட்டுக்கொடுக்காத மனநிலை இவையெல்லாம் சேர்ந்து, அந்த உறவை பாதித்தன.

இறைமக்களே, இந்தச் சம்பவம் நமக்கு ஒரு மிக முக்கியமான உண்மையை எடுத்துரைக்கிறது. வாழ்க்கையில் பெரும்பாலான பிரச்சனைகள் பெரிய காரணங்களால் உருவா குவதில்லை. மிகச் சிறிய விஷயங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் அணுகுமுறையே அதை பெரிதாக்குகிறது. ஒரு சிறிய கருத்து வேறுபாடு, நாம் அதை எப்படி கையாளுகிறோம் என்பதையே பொருத்தது. அதை நிதானமாக அணுகினால் அது அங்கேயே முடிந்துவிடும். ஆனால் அதை பிடிவாதமாக எடுத்துக் கொண்டால் அது உறவையே பாதிக்கும் அளவுக்கு வளர்ந்து விடும்.
வாக்குவாதம் எப்போதும் உண்மையை வெளிப்படுத்தாது; அது பல நேரங்களில் மனதை காயப்படுத்தும். “யார் சரி?” என்பதை நிரூபிப்பதில் நாம் அதிகமாக கவனம் செலுத்தும் போது, “உறவு சரியாக இருக்கிறதா?” என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

உறவுகளில் வெற்றி பெறுவது என்பது, மற்றவரை தோற்கடிப்பதல்ல. அது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதி லும், மதிப்பதிலும் இருக்கிறது. பலர், விட்டுக்கொடுத்தால் தாங்கள் பலவீனமானவர்கள் என்று நினைக்கிறார்கள். “நான் ஏன் மௌனமாக இருக்க வேண்டும்?” “நான் சொல்வது தான் சரி” என்ற எண்ணம் அவர்களை வழிநடத்துகிறது. ஆனால் உண்மையில், விட்டுக்கொடுத்தல் என்பது பலவீனம் அல்ல; அது பலத்தின் வெளிப்பாடு. அது மனப்பெருக்கத்தின் அடையாளம். அது அன்பின் செயல்பாடு.

நாம் விரும்பியது கிடைத்தால் மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் நம்மைச் சேர்ந்தவர்களின் நலனுக்காக, நம்முடைய விருப்பத்தை விட்டுக்கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இன்னும் உயர்ந்தது. அது உறவுகளை ஆழமாக இணைக் கும். ‘விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை’ என்ற பழமொழி ஒரு சாதாரண சொல் அல்ல; அது வாழ்க்கையை காக்கும் ஞானம்.

குடும்பத்தில் அமைதி நிலைக்க வேண்டுமானால், தாய் தந்தை, கணவன் மனைவி, சகோதரர்கள், நண்பர்கள் அனைவரிடமும் புரிதலும் பொறுமையும் அவசியம். ஒவ்வொ ருவரும் தங்கள் கருத்தில் மட்டும் நிலைத்திருந்தால், எந்த உறவும் நீண்ட நாள் நிலைக்காது.

சில நேரங்களில் மௌனம் பேசுவதைக் காட்டிலும் வலிமையானது. சில தருணங்களில் ஒரு அடி பின்வாங்குவது, உறவை முன்னேற்றும். ஒரு சிறிய “சரி, நீ சொல்வது போல் இருக்கட்டும்” என்ற வார்த்தை கூட பெரிய பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரலாம்.
இறைவேதம் நமக்கு இதை தெளிவாக கற்றுக்கொடுக் கிறது: “தீமைக்குத் தீமையையும் செய்யாதீர்கள்” (1 பேது 3:9). மேலும், “ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து வாழுங்கள்” (கொலோ. 3:18) என்று அறிவுறுத்துகிறது.

இந்த வசனங்கள், உறவுகளில் பணிவு, அன்பு, சமாதானம் ஆகியவை எவ்வளவு முக்கியமானவை என்பதை நினைவூட்டுகின்றன.

இறைமக்களே, வாழ்க்கையில் அமைதி வேண்டுமா? அப்படியானால், நாம் எப்போது பேச வேண்டும், எப்போது மௌனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எப்போது வாதிட வேண்டும், எப்போது விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

உறவுகளை வெல்ல முயற்சிக்காதீர்;
உறவுகளை காக்க முயற்சியுங்கள்.

முடிவாக நினைவில் கொள்ள வேண்டியது: சிறிய வாக்குவாதம் பெரிய பிரிவை உண்டாக்கலாம்.
ஆனால் ஒரு சிறிய விட்டுக்கொடுத்தல் பெரிய உறவை காப்பாற்றும்.

வாக்குவாதம் உறவுகளை உடைக்கும்; விட்டுக்கொடுத்தல் உறவுகளை கட்டும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: அடையாளத்தை அறியாத கழுகு
Next: காணாத கயிறுகள்

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

king
  • வேதாகம மனிதர்கள்

சவுல் – இஸ்ரவேலின் முதல் ராஜா

Editorial Team October 5, 2026
சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன் samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

Watchman Nee
  • கவிதைகள்

ஜெபமும் ஆவிக்குரிய போராட்டமும் குறித்து 10 ஆழமான கருத்துகள்

Editorial Team October 8, 2026
women touch jesus
  • வேதபகுதி பிரசங்கங்கள்

தொட்டால் போதும் — விசுவாசம் விடுதலையைப் பெற்றது!

Editorial Team October 7, 2026
caananite women
  • வேதபகுதி பிரசங்கங்கள்

விடாமல் மன்றாடு — விசுவாசம் விடை பெறும்!

Editorial Team October 7, 2026
forgiveness
  • தலைப்பு பிரசங்கங்கள்

மன்னியுங்கள்; விடுதலை பெறுங்கள்!

Editorial Team October 7, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.