Skip to content
July 16, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • உறவையும் உயிரையும் பறிக்கும் மதுபழக்கம்
  • தியான செய்திகள்

உறவையும் உயிரையும் பறிக்கும் மதுபழக்கம்

Editorial Team July 9, 2026 1 minute read
tn_19

ஒரு கிராமத்தில், மக்களை நல்ல வாழ்க்கை முறைக்கு வழிநடத்தும் நோக்கத்துடன் ஒரு தொண்டு நிறுவனம் விழிப்புணர்வு முகாமை நடத்தியது. குறிப்பாக சாராயப் பழக் கத்தின் தீமைகளை விளக்குவதற்காக, மாலை நேரத்தில் நிகழ்ச்சிகளும் செயல்முறை விளக்கங்களும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.

அந்த நிகழ்ச்சியில், ஒரு நபர் அனைவரும் கவனிக்கும் படி ஒரு சிறிய விளக்கத்தை அளித்தார். அவர் ஒரு கண் ணாடி டம்ளரில் சில புழுக்களை போட்டார். பின்னர் அதில் சாராயத்தை ஊற்றினார். சில நொடிகளில் அந்தப் புழுக்கள் துடித்துத் துடித்து இறந்துவிட்டன.

அதைப் பார்த்த மக்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர். உடனே அந்த நபர், அங்கு இருந்த ஒரு குடிப் பழக்கமுள்ள மனிதனை அழைத்து, “இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது?” என்று கேட்டார்.

அந்த மனிதன் சிரித்தபடி, “சாராயம் குடித்தால் நம் வயிற்றிலிருக்கும் புழுக்கள் எல்லாம் சாகிவிடும் போல!” என்று பதிலளித்தான்.

இந்த பதில் சிரிப்பை ஏற்படுத்தினாலும், அது ஒரு வேதனையான உண்மையை வெளிப்படுத்தியது. உண்மையை அறிந்திருந்தும் அதை ஏற்காமல், நகைச்சுவையாக மாற்றிக் கொள்ளும் மனநிலையே மனிதனை அழிவுக்கு இட்டுச் செல்கிறது.

“குடி குடியை கெடுக்கும்” என்று நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் அறிந்தும் அதை விட்டு விலக மனம் இல்லாததே மிகப்பெரிய பிரச்சனை.

சாராயம் ஒரு சாதாரண பழக்கம் அல்ல; அது ஒரு ஆபத்தான அடிமைத்தனம். அது மனித உடலின் பல முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது. நீரிழிவு, உயர்ந்த இரத்த அழுத்தம், ஈரல் நோய், நரம்பு தளர்ச்சி போன்ற பல நோய்களுக்கு காரணமாகிறது. மேலும் மனநிலையையும் பாதித்து, கோபம், வன்முறை, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது.

ஒரு மனிதனை மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் சிதைக்கும் சக்தி இதற்கு உள்ளது. உறவுகள் உடைகின் றன, அமைதி குலைகிறது, வாழ்க்கை சீர்குலைகிறது.

இதனால் தான் இறைவேதம் மதுபானத்தைப் பற்றி எச்சரிக்கிறது. வெளிப்புறத்தில் அது கவர்ச்சியாகத் தோன்றி னாலும், அதன் முடிவு அழிவாகும் என்று தெளிவாக கூறுகி றது. ஆகையால், இந்த பழக்கத்திலிருந்து விலகுவது ஒரு நல்ல முடிவு மட்டுமல்ல; அது ஒரு அவசியமான முடிவு. வாழ்க்கையை காக்க வேண்டுமெனில், இப்படியான தீய பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நமது எதிர்காலத் தை நிர்ணயிக்கிறது.

குடிக்கு அடிமையாகி
வாழ்வை அழிக்காதீர்கள்!
வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து காட்டுங்கள்!!

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: இறைவன் ஈந்த வரையறை
Next: பதில் உண்டு

இதையும் படிக்கலாம்

tn_48
  • தியான செய்திகள்

அறியாமையில் இழந்த ஆசீர்வாதம்

Editorial Team July 16, 2026
tn_45
  • தியான செய்திகள்

பொறுமை கடலினும் பெரிது

Editorial Team July 15, 2026
tn_44
  • தியான செய்திகள்

சிறிய கனவு

Editorial Team July 15, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tn_48
  • தியான செய்திகள்

அறியாமையில் இழந்த ஆசீர்வாதம்

Editorial Team July 16, 2026
tn_45
  • தியான செய்திகள்

பொறுமை கடலினும் பெரிது

Editorial Team July 15, 2026
tn_44
  • தியான செய்திகள்

சிறிய கனவு

Editorial Team July 15, 2026
tn_49
  • தியான செய்திகள்

தேவையானது ஒரு தீர்மானம்

Editorial Team July 15, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.