Skip to content
August 24, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • பதில் உண்டு
  • தியான செய்திகள்

பதில் உண்டு

Editorial Team July 9, 2026 1 minute read
tn_20

ஒரு தாய் பிரசவ வலியால் அவசரமாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். மருத்துவர்களின் உதவி யால் குழந்தை பாதுகாப்பாகப் பிறந்தது. புதிய உயிரின் வருகை அந்தக் குடும்பத்திற்கு மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் அதே நேரத்தில், மருத்துவச் செலவுகள் அவர்களு க்கு பெரும் சுமையாக மாறின.

சில நாட்களுக்குப் பிறகு, தாய் மற்றும் குழந்தை நலமாக இருப்பதால் வீட்டிற்கு அனுப்ப அனுமதி வழங்கப் பட்டது. அதோடு, மருத்துவச் செலவுகளுக்கான கட்டண சீட்டும் குழந்தையின் தகப்பனிடம் கொடுக்கப்பட்டது.

அந்த சீட்டைப் பார்த்ததும், அவரது மனம் உடைந்தது. தேவையான தொகையை விட அவரிடம் ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்தது. தன் நிலையை பணிவுடன் விளக்கி, “சிறிது கால அவகாசம் கொடுத்தால் கட்டிவிடுகிறேன்” என்று கேட்டார். ஆனால், “முழு தொகையும் செலுத்திய பிறகே உங்கள் குடும்பத்தை அழைத்துச் செல்லலாம்” என்ற கடுமையான பதில் கிடைத்தது.

அந்த இரவு, அவருடைய வாழ்க்கையில் மிகவும் இருண்ட தருணமாக இருந்தது. வெளியில் இருள் சூழ்ந்திருந் தது; ஆனால் அதைவிட அவரது மனமே அதிக இருளில் மூழ்கியது. யாரிடம் செல்வது என்று தெரியாமல், தனிமையில் துன்புற்ற அவர், ஒரு மூலையில் மண்டியிட்டு தேவனை நோக்கி ஜெபிக்கத் தொடங்கினார்.

அவர் பாடியதோ ஒரு பாடல் அல்ல; உடைந்த இதயத்தின் அழுகை: “கண்ணீரெல்லாம் துடைப்பார்” அவர் தனது இயலாமையையும் தேவையையும் முழுமையாக தேவனிடம் ஒப்படைத்தார்.

அடுத்தநாள் அதிகாலையில் ஒரு அதிசயம் நடந்தது. ஒருவன் அவசரமாக வந்து, அவரை பெயர் சொல்லி அழைத் தான். “நான் உங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நேற்று இரவு முழுவதும் இருந்தது. அதனால் தான் உங்களைத் தேடி வந்தேன்” என்று கூறி, பணத்தை அவரது கைகளில் வைத்தான். அந்த தொகை, தேவையான அளவைத் தாண்டி இருந்தது.

முன்பு கண்ணீரோடு ஜெபித்த அந்த மனிதன், இப்போது நன்றியோடு தேவனைத் துதித்தார். தனது மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு திரும்பினார்.

இந்தச் சம்பவம் ஒரு பெரிய உண்மையை நமக்கு உணர்த்துகிறது: தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர்.

மனிதர்கள் நம்மை புரிந்து கொள்ளாமல் போகலாம்; ஆனால் தேவன் நம் இதயத்தின் ஆழத்தை அறிந்தவர். நாம் உண்மையோடு அவரை நாடும் போது, அவர் நிச்சயம் பதில் அளிப்பார்.
ஆகையால், நாம் சிக்கலில் சிக்கும்போது மனம் தளர வேண்டாம். மனித உதவியை மட்டும் எதிர்பார்க்காமல், தேவனை நாட வேண்டும். உண்மையான ஜெபம், கண்ணீர் கலந்த விண்ணப்பம், உறுதியான நம்பிக்கை இவையெல் லாம் வீணாகாது.

இறைவேதம் கூறுகிறது: “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான்; நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளுவேன்” (சங்கீதம் 91:15)

எனவே,
ஜெபத்தில் நிலைத்திருங்கள்.
நம்பிக்கையை விடாதீர்கள்.
கண்ணீரோடு ஜெபிப்பவன், சந்தோஷத்தோடு சாட்சி சொல்வான்.!

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: உறவையும் உயிரையும் பறிக்கும் மதுபழக்கம்
Next: நடப்பதெல்லாம் நன்மைக்கே!

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026
தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன் david
  • வேதாகம மனிதர்கள்

தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன்

August 24, 2026
ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

August 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?
  • கேள்வி பதில்கள்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?

Editorial Team August 24, 2026
அந்நிய பாஷை உண்மையா?
  • கேள்வி பதில்கள்

அந்நிய பாஷை உண்மையா?

Editorial Team August 24, 2026
Jonah
  • தலைப்பு பிரசங்கங்கள்

யோனா புத்தகத்தில் தேவன் பயன்படுத்திய காரியங்கள் (சூழ்நிலை)

Editorial Team August 24, 2026
true-worship
  • வேதபகுதி பிரசங்கங்கள்

ஆகூரின் இரண்டு மனுக்கள்

Editorial Team August 24, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.