Skip to content
July 9, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • தியான செய்திகள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Subscribe
  • Home
  • பிரசங்க குறிப்புகள்
  • தியான செய்திகள்
  • இறைவன் ஈந்த வரையறை
  • தியான செய்திகள்

இறைவன் ஈந்த வரையறை

Editorial Team July 9, 2026 1 minute read
tn_18

ஒரு நகரத்தின் ஒரு தெருவில் மூன்று திறமையான தையல்காரர்கள் தங்கள் கடைகளைத் தொடங்கினர். அவர் கள் மூவரும் தங்கள் தொழிலில் முன்னேற வேண்டும் என்ற ஆசையுடன், மக்களின் கவனத்தை ஈர்க்க முயன்றனர்.

முதல் தையல்காரர் தனது கடையின் முன் ஒரு பெரிய பலகை வைத்து, “இந்த நகரத்திலேயே மிகச்சிறந்த தையற்கடை” என்று எழுதியிருந்தார். அந்த வாசகம் பலரின் கவனத்தை ஈர்த்தது.

இதைக் கண்ட இரண்டாவது தையல்காரர், “நாம் இதைவிட மேல் இருக்க வேண்டும்” என்று எண்ணி, தனது கடையின் முன்பு “இந்த உலகிலேயே மிகச்சிறந்த தையற் கடை” என்று இன்னும் பெருமையாக எழுதினார்.

இப்போது மூன்றாவது தையல்காரர் குழப்பமடைந்தார். “இதைக் கடந்து என்ன எழுத முடியும்?” என்று நீண்ட நேரம் சிந்தித்தார். இறுதியில், ஒரு எளிய ஆனால் ஆழமான யோச னை அவருக்குத் தோன்றியது.

அடுத்த நாள் அவர் தனது கடையின் முன்பு ஒரு பலகை வைத்தார். அதில், “இந்த தெருவிலேயே மிகச்சிறந்த தையற்கடை” என்று எழுதப்பட்டிருந்தது.

ஆச்சரியமாக, அந்தக் கடைக்கே அதிகமான மக்கள் திரண்டனர். மற்ற இருவரும் அதைக் கண்டு வியந்தனர். காரணம் என்னவென்றால், மூன்றாவது தையல்காரர் மிகைப் படுத்திப் பேசவில்லை; அருகிலிருந்த உண்மையை நம்பிக்கை யுடன் சொன்னார்.

இந்தச்சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. உண்மையான சிறப்பு என்பது உலகம் முழுவதும் புகழ்பெறுவதில் இல்லை; நம்மைச் சுற்றி யுள்ளவர்களின் நம்பிக்கையைப் பெறுவதில்தான் உள்ளது.

ஒரு மனிதன் முதலில் தன் குடும்பத்தில் நம்பிக்கை க்குரியவனாக இருக்க வேண்டும். அதன் பிறகு தான் அவன் சமுதாயத்திலும், உலகத்திலும் மதிப்பைப் பெற முடியும். அடிப்படை உறுதியாக இருந்தால் தான் உயரம் நிலைக்கும்.

இன்றைய உலகில் பலர் உடனடியாக பெரிய வெற்றி யை விரும்புகின்றனர். வெளிப்புற பாராட்டுகள், சமூக வலைத் தள புகழ், விரைவான அங்கீகாரம் இவையே பலரின் இலக்காகிவிட்டன. ஆனால் அடிப்படை இல்லாமல் கிடைக் கும் உயரம் நிலைத்திருக்காது.

நமது வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க விரும்பி னால், அது நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். நம் குடும்ப த்தில், நம் சுற்றுப்புறத்தில், நம் நாளந்தோறும் வாழ்க்கையில் உண்மையாய் வாழ வேண்டும். நம் வார்த்தைகளும் செயல் களும் ஒன்றாக இருக்க வேண்டும்.
அப்படியானால் அந்த மாற்றம் மெதுவாக விரியும். குடும்பத்திலிருந்து தெருவிற்கு, தெருவிலிருந்து சமூகத்திற்கு, சமூகத்திலிருந்து உலகத்திற்கு பரவும்.

உண்மையான தாக்கம்
தொலைவில் தொடங்குவதில்லை; – அது
அருகிலிருந்தே தொடங்குகிறது.

அருகிலே ஒளிர்பவன்,

உலகத்தையே ஒளிர்விக்க முடியும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: விதைத்ததை அறுப்போம்
Next: உறவையும் உயிரையும் பறிக்கும் மதுபழக்கம்

இதையும் படிக்கலாம்

tn_26
  • தியான செய்திகள்

இலவசமான சொர்க்கம்

Editorial Team July 9, 2026
tn_25
  • தியான செய்திகள்

அன்பு கொடுக்கும் மரம்

Editorial Team July 9, 2026
tn_22
  • தியான செய்திகள்

அரை அறிவின் அபாயம்

Editorial Team July 9, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • தகவல் களஞ்சியம்
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • தகவல் களஞ்சியம்
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • தகவல் களஞ்சியம்
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • பிரசங்க குறிப்புகள்
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • பிரசங்க குறிப்புகள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • பிரசங்க குறிப்புகள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tn_26
  • தியான செய்திகள்

இலவசமான சொர்க்கம்

Editorial Team July 9, 2026
tn_25
  • தியான செய்திகள்

அன்பு கொடுக்கும் மரம்

Editorial Team July 9, 2026
tn_22
  • தியான செய்திகள்

அரை அறிவின் அபாயம்

Editorial Team July 9, 2026
tn_21
  • தியான செய்திகள்

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

Editorial Team July 9, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.