Skip to content
August 24, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • விதைத்ததை அறுப்போம்
  • தியான செய்திகள்

விதைத்ததை அறுப்போம்

Editorial Team July 9, 2026 1 minute read
tn_16

ஒரு மனிதன், தன் தந்தை இறந்தபின் தனது முதிய தாயை தன்னுடன் வைத்துக் கவனிக்காமல், ஒரு ஆதரவற் றோர் இல்லத்தில் சேர்த்தான். வாழ்க்கையின் வசதிகளும், தனக்கான சுகங்களும் அவனுக்கு முக்கியமாகிவிட்டதால், தாயின் பராமரிப்பு அவனுக்கு ஒரு சுமையாக தோன்றியது. அதனால் அந்தப் பொறுப்பை பிறரிடம் ஒப்படைத்து விட்டான்.

அவன் முழுமையாகத் தாயை மறந்துவிட்டவன் அல்ல. அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது அந்த இல்லத்திற்குச் சென்று அவளை பார்த்துவிட்டு திரும்பிவிடுவான். ஆனால் அந்த சந்திப்புகளில் உண்மையான அன்பு குறைந்து, கடமை மட்டுமே இருந்தது.

ஒருநாள் அவசர செய்தி வந்தது: “உங்கள் தாய் மிக வும் மோசமான நிலையில் இருக்கிறார். உடனே வாருங்கள்.”

அந்த செய்தியை கேட்டவுடன் அவன் விரைவாக ஓடி வந்தான். தன் தாயின் அருகில் அமர்ந்து, கண்ணீர் மல்க, “அம்மா, உங்களுக்கு ஏதேனும் கடைசி ஆசை இருக்கிறதா? நான் செய்து விடுகிறேன்” என்று கேட்டான்.

அப்போது தாய் மெதுவாக, பலவீனமான குரலில், “மகனே, இந்த இல்லத்திற்கு ஒரு நல்ல மின்விசிறி வாங்கிக் கொடுத்து விடு” என்றாள்.

அந்த வார்த்தைகள் அவனை ஆச்சரியப்படுத்தின. “அம்மா, நான் வரும்போதெல்லாம் இதைப் பற்றி நீங்கள் சொல்லவில்லை. இப்போது ஏன்?” என்று கேட்டான்.
அப்போது தாய் அவனைப் பார்த்து, ஆழமான அர்த் தம் கொண்ட வார்த்தைகளை சொன்னாள்:

“மகனே, நான் இங்கேயுள்ள வெப்பத்தை தாங்கிக் கொண்டேன். ஆனால் நாளை உன் மகன் உன்னை இங்கே கொண்டு வந்தால், உன்னால் இதைத் தாங்க முடியாது.”

இந்த வார்த்தைகள் அவன் இதயத்தை நொறுக்கி யது. தாயின் அன்பும், அவன் செய்த தவறும் அவனுக்குப் புரிந்தது. அந்த உண்மையைச் சொல்லிவிட்டு தாய் அமைதி யாக உயிர் நீத்தாள்.

இந்தச்சம்பவம் நமக்கு வாழ்க்கையின் ஒரு ஆழமான உண்மையை கற்றுக்கொடுக்கிறது:

நாம் விதைப்பதையே நாம் அறுப்போம். நாம் இன்று செய்கிற ஒவ்வொரு செயலும், நாளைய வாழ்க்கையை உருவா க்குகிறது. அன்பை விதைத்தால் அன்பை அறுப்போம்; அலட் சியத்தை விதைத்தால் அதையே அனுபவிப்போம். “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்ற பழமொழி இதையே உணர்த்துகிறது. இன்றைய சமுதாயத்தில் குடும்ப உறவுகள் பல இடங்களில் சிதைந்து கொண்டிருக்கின்றன. சுயநலம் அதிகரிக்கும் போது அன்பு குறைகிறது. அன்பு குறையும் போது உறவுகள் பலவீனமடைகின்றன. அதனால் குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுகிறது.

பெற்றோரை மதிப்பது ஒரு கடமை மட்டுமல்ல; அது ஒரு ஆசீர்வாதத்தின் கதவு. அவர்களின் தியாகம், அன்பு, பொறுமை இவற்றை நினைவில் வைத்து நாம் அவர்களை கவனிக்க வேண்டும்.

அன்பை விதைப்போம்.
மரியாதையை விதைப்போம்.
நன்றியுணர்வை விதைப்போம்.
அப்போது நம் வாழ்க்கை நன்மைகளால் நிரம்பும்.

நாம் இன்று எப்படி நடக்கிறோமோ, அதே மாதிரி நாளை நமக்கு திரும்பி வரும். அதனால் இன்று நாம் எதை விதைக்கிறோம் என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

விதைத்ததை அறுப்போம்; – எனவே

நல்லதை விதைத்து நல்லதையே அறுப்போம்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: ஓய்வு உடலுக்கு மட்டுமே; உழைப்பிற்கு அல்ல
Next: இறைவன் ஈந்த வரையறை

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026
தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன் david
  • வேதாகம மனிதர்கள்

தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன்

August 24, 2026
ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

August 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?
  • கேள்வி பதில்கள்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?

Editorial Team August 24, 2026
அந்நிய பாஷை உண்மையா?
  • கேள்வி பதில்கள்

அந்நிய பாஷை உண்மையா?

Editorial Team August 24, 2026
Jonah
  • தலைப்பு பிரசங்கங்கள்

யோனா புத்தகத்தில் தேவன் பயன்படுத்திய காரியங்கள் (சூழ்நிலை)

Editorial Team August 24, 2026
true-worship
  • வேதபகுதி பிரசங்கங்கள்

ஆகூரின் இரண்டு மனுக்கள்

Editorial Team August 24, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.