Skip to content
September 22, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • இனிமைக்காக நட்பை மாற்றிக்கொள்ளாதே
  • தியான செய்திகள்

இனிமைக்காக நட்பை மாற்றிக்கொள்ளாதே

Editorial Team July 25, 2026 1 minute read
tn_75

ஒரு வனப்பகுதிக்கருகே அமைந்திருந்த கிராமத்தில், பல ஆடுகள் கொண்ட ஓர் மந்தை வாழ்ந்து வந்தது. அந்த ஆடுகள் தினமும் அருகிலுள்ள பசுமை நிறைந்த புல்வெளியில் திரண்டு சென்று மேய்ந்துவந்தன.

இந்த ஆடுகளுக்கு பாதுகாப்பாக, சில வேட்டை நாய்கள் மந்தையை சுற்றி நன்கு காவல் காத்து வந்தன. அவை எப்போதும் விழிப்புடன் இருந்தது. காட்டிலிருந்து வரும் மிருகங்கள் அல்லது ஆபத்துகளுக்கு எதிராக ஆடுகளை பாதுகாத்து வந்தன.

அருகிலுள்ள காட்டில் ஓர் ஓநாய் கூட்டம் இருந்தது. அந்த ஓநாய்களுக்கு ஆடுகளை பிடித்து உண்பதற்கு நோட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஆனாலும், நாய்களின் பாதுகாப்பு எப்போதும் உறுதியாக இருந்ததால், அவைகளால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஒருநாள், அந்த ஓநாய்களின் தலைவர், ஆடுகள் மேயும் இடத்திற்கு வந்து ஒரு கருத்தை முன்வைத்தான். “நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களுடன் நாங்களும் நட்பை வளர்த்துக்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் நாய்களோடு மட்டுமே நட்பாக இருக்கிறீர்கள். ஏன் நாங்களும் உங்களோடு நட்பாக இருக்கக் கூடாதா? எங்களை ஏன் வெறுப்புடன் பார்கிறீர்கள்?” என அன்பான வார்த்தைகளை அள்ளி வீசியது.

இந்த வார்த்தைகள் சில ஆடுகளின் மனதில் சந்தே கத்தை விதைத்தன. “நாய்கள் எப்போதும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன; ஆனால் ஓநாய்களோ மென்மையாகவும் பாசமாகவும் பேசுகின்றன” எனக் கூறி, ஆடுகள் நாய்களின் உறவை துண்டிக்க தொடங்கின.

சில நாட்களுக்குள், அந்த மந்தை முழுவதும் நாய்களின் அன்பையும் நம்பிக்கையையும் குறைத்து விட்டன. ஆடுகள், தங்களுக்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்த நாய்களை விலக்கிவிட்டு, ஓநாய்களை அணுகத் தொடங்கின.

அந்த இரவு நாய்கள் அருகிலே இல்லாத வேளையில், ஓநாய்கள் தங்கள் படையுடன் மந்தைக்குள் நுழைந்தன. ஆடுகளெல்லாம் ஓய்வெடுத்து, உறங்கிக் கொண்டிருந்தன. ஓநாய்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாததால், மந்தையை முழுவதுமாக சுற்றி வளைந்துகொண்டது.

அடுத்த நாள் காலையில், அந்த புல்வெளி வெறுமையானது. அங்கே ஒலி எதுவுமில்லை. ஆடுகளும் இல்லை… நாய்களும் இல்லை… எச்சரிக்கையாயிருந்த நட்பும் இல்லை.
இறைமக்களே, நமக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காத உண்மையான உறவுகளான பெற்றோர், உடன் பிறந்தோர், ஆசிரியர்கள், பெரியவர்கள், சிநேகிதர்கள் போன்றவர்கள் நம்மை காத்து வழிநடத்தி வருகின்றனர். சில நேரங்களில் அவர்கள் நம்மை எச்சரித்து, சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது போல் தோன்றலாம். ஆனால், அவர்கள் நம்முடைய நலனுக்காகத்தான் அதனைச் செய்கிறார்கள்.

“சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்” (நீதி 27:6) என இறைவேதம் கூறுகிறது. நம்மை பாதுகாக்கும் நாய்களை விலக்கி, இனிமையாகப் பேசும் ஓநாய்களின் நட்பை ஏற்ற ஆடுகள், இறுதியில் தங்கள் வாழ்க்கையையே இழந்தன. அதேபோல், நம்மை நேசிக்கும் உறவுகளை விலக்கி, வெளிப்புற இனிமைக்காக நட்பை மாற்றிக் கொண்டால், அது பேரழிவை ஏற்படுத்தும். நல்ல உறவுகளை மதிப்போம்; பாதுகாப்பும் நிம்மதியும் அதில்தான் இருக்கின்றன. இறைவேதமும் இதனை வலியுறுத்துகிறது.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: பொறுமையோடு முன்னேறுங்கள்
Next: மனமிருந்தால் மார்க்கமுண்டு

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

Editorial Team September 9, 2026
ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை! Rahab
  • வேதாகம மனிதர்கள்

ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை!

September 9, 2026
யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு Johnathan
  • வேதாகம மனிதர்கள்

யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு

September 1, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

C.S.Lewis
  • கவிதைகள்

சி.எஸ். லூயிஸ் – கிறிஸ்தவ விசுவாசத்தை ஆழப்படுத்தும் 10 சிந்தனைகள்

Editorial Team September 21, 2026
mother terasa
  • கவிதைகள்

அன்னை தெரசா – அன்பால் உலகைத் தொட்ட கருணையின் தாய்!

Editorial Team September 21, 2026
jim eliot
  • கவிதைகள்

ஜிம் எலியட் – தேவனுக்காக வாழ்ந்த அர்ப்பணிப்பின் வாழ்க்கை!

Editorial Team September 21, 2026
william carey
  • கவிதைகள்

வில்லியம் கேரி – விசுவாசம், ஊழியம் மற்றும் தேவனைப் பற்றிய ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்

Editorial Team September 21, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.