ஒரு அன்பான அப்பா தனது சிறிய மகனுக்குப் மூன்று உண்டியல்கள் வாங்கிக் கொடுத்தார். அவற்றை மகனிடம் கொடுத்து, “இவை சாதாரண உண்டியல்கள் அல்ல; உன் வாழ்க்கையை சரியாக நடத்த கற்றுக் கொடுக்கும் மூன்று முக்கியமான பாடங்கள் இதில் இருக்கிறது” என்று சொன்னார்.
முதல் உண்டியலைக் காட்டி அப்பா மெதுவாகக் கூறினார்: “இது கடவுளுக்கானது. நாம் பெறும் எல்லா ஆசீர்வாதங்களும் தேவனிடமிருந்தே வருகிறது. ஆகவே நாம் சம்பாதிப்பதில் இருந்து முதலில் தேவனுக்குக் கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். இது நன்றியுள்ள இதயத்தின் அடையாளம்.”
பின்னர் இரண்டாவது உண்டியலை எடுத்துக் கொண்டு, “இது உன் எதிர்காலத்திற்கானது. இன்று கிடைத்ததை எல்லாம் உடனே செலவு செய்து விடக்கூடாது. நாளைக்கு என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. ஆகவே கொஞ்சம் சேமித்து வைப்பது புத்திசாலித்தனமான வாழ்க்கையின் அடையாளம்” என்றார்.
மூன்றாவது உண்டியலை மகனின் கையில் வைத்து, “இது பிறருக்கானது. இந்த உலகத்தில் உதவி தேவைப் படுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். நாம் பெற்ற ஆசீர்வாதத் தில் இருந்து கொஞ்சம் பகிர்ந்து கொள்வது தேவனுக்குப் பிரியமானது. கொடுப்பதில் தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது” என்று அன்புடன் விளக்கினார்.
அந்த நாள் முதல் அந்தச் சிறுவன் எப்போது பணம் கிடைத்தாலும் அதை மூன்று பாகங்களாகப் பிரிக்கத் தொடங்கினான். ஒரு பகுதியை தேவனுக்காக வைத்தான். மற்றொரு பகுதியை சேமித்தான். மீதியை தேவையுள்ளவர்க ளுடன் பகிர்ந்தான். இந்த சிறிய பழக்கம் மெதுவாக அவன் வாழ்க்கையை மாற்றத் தொடங்கியது.
காலம் சென்றது. அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவ னானான். ஒருநாள் தன் அப்பாவிடம் வந்து கண்களில் நன்றியுடன் கூறினான்: “அப்பா, நீங்கள் கொடுத்த அந்த மூன்று உண்டியல்கள் என் வாழ்க்கையை முழுவதும் மாற்றிவிட்டது. தேவனுக்குக் கொடுத்தது என் விசுவாசத்தை வளர்த்தது. சேமித்தது என் வாழ்க்கையை பாதுகாத்தது. பிறருடன் பகிர்ந்தது என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பியது.”
அதை கேட்ட அப்பா புன்னகையுடன், “மகனே, பணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக்கொண்டவன் வாழ்க்கை யையும் சரியாக வாழ கற்றுக்கொள்வான்” என்று சொன்னார்.
இக்கதை நமக்கு ஒரு மிக முக்கியமான உண்மை யை எடுத்துக்காட்டுகிறது. பணம் வாழ்க்கையில் அவசியமா னது. ஆனால் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே நமது வாழ்க்கையின் தரத்தை தீர்மானிக்கிறது. தேவனுக்குக் கொடுக்காத வாழ்க்கை நன்றியற்ற வாழ்க்கையாக மாறும். சேமிக்காத வாழ்க்கை பாதுகாப்பற்றதாக மாறும். பகிராத வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக மாறும்.
இறைவேதம் சொல்லுகிறது: “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” (1 தீமோ. 6:10) “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக் கிறான்” (லூக்.16:10)
ஆம், நமது வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை; ஆனால் நமது மனம் குறையக்கூடாது. கொடுக்க விரும்பும் இதயத்தை தேவன் மிகவும் மதிக்கிறார்.
தேவனுக்குக் கொடுக்கும் மனம், எதிர்காலத்திற்காக சேமிக்கும் புத்தி, பிறருடன் பகிரும் அன்பு இந்த மூன்றும் இருந்தால் நமது வாழ்க்கை ஆசீர்வாதமாக மாறும்.
நாம் சம்பாதிப்பது அல்ல, அதை எப்படி பயன்படுத்து கிறோம் என்பதே நம் வாழ்க்கையின் உண்மையான அளவுகோல் என்பதை மறந்துவிடாதிருப்போம்.
– போதகர். பெ. பெவிஸ்டன்