Skip to content
August 24, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • காணாத கயிறுகள்
  • தியான செய்திகள்

காணாத கயிறுகள்

Editorial Team July 10, 2026 1 minute read
tn_30

ஒரு நாள், ஒரு மனிதன் ஒரு கிராமம் வழியாக அமைதியாக நடந்து கொண்டிருந்தான். அவன் மனம் அமைதி யோடும் கவனத்தோடும் இருந்தது. வழியில் காணப்பட்ட ஒவ்வொரு காட்சியையும் ரசித்தபடி சென்றுகொண்டிருந்தான். அப்போது அவன் கண்கள் ஒரு இடத்தில் நின்றுபோனது. அங்கே சில பெரிய யானைகள் கட்டப்பட்டிருந்தன. அவை மிக வலிமையானவை. ஒரு மரத்தையே பிடுங்கிவிடும் அளவிற்கு சக்தி கொண்டவை. ஆனால் அவற்றை கட்டியிருந் தது மிகவும் மெலிந்த ஒரு கயிறு மட்டுமே.

அந்த கயிறு அவற்றின் காலில் சாதாரணமாக கட்டப்பட்டிருந்தது. அதை பார்த்த மனிதன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். “இவ்வளவு பெரிய யானைகள், இப்படிப் பட்ட பலவீனமான கயிறால் எப்படி கட்டுப்பட்டிருக்கின்றன?” என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது. “இவை விரும்பினால் இந்த கயிறை எளிதில் அறுத்து தப்பிக்க முடியாதா?” என்று அவன் யோசித்தான்.
அவனுடைய குழப்பத்திற்கான விடையை அறிய, அங்கிருந்த யானைப் பாதுகாவலரிடம் அவன் கேட்டான். அவர் சிரித்தபடி ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்தினார்: “இந்த யானைகளை கட்டி வைத்திருப்பது கயிறு அல்ல; அவற்றின் மனதில் இருக்கும் நம்பிக்கை தான்.”

அவர் மேலும் விளக்கத் தொடங்கினார். “இந்த யானை கள் சிறிய கன்றுகளாக இருந்தபோது, இதே மாதிரியான கயிறுகளால் கட்டப்பட்டிருந்தன. அப்போது அவை தப்பிக்க பலமுறை முயன்றன. தங்கள் முழு வலிமையையும் பயன்படு த்தின. ஆனால் அவற்றால் கயிறை அறுத்து விட முடியவில் லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் தோல்வி அடைந்த தால், ஒரு எண்ணம் அவற்றின் மனதில் ஆழமாக பதிந்தது ‘என்னால் முடியாது.’”

காலம் சென்றது. அந்தச் சிறிய கன்றுகள் வளர்ந்து இன்று பெரிய யானைகளாக மாறின. அவற்றின் உடல் வலிமை பல மடங்கு அதிகரித்தது. ஆனால் அவற்றின் மனதில் பதிந்திருந்த அந்த பழைய தோல்வி நினைவு மாறவில்லை. அதனால் தான் இன்று அவற்றால் எளிதில் அறுக்கக் கூடிய கயிறையும் அவை முயற்சி செய்து அறுக்கவில்லை.

உண்மையில், அவற்றை கட்டிப்போட்டது கயிறு அல்ல; அவற்றின் மனதில் பதிந்திருந்த “முடியாது” என்ற நம்பிக்கையே. இறைமக்களே, இந்தச் சம்பவம் நம்முடைய வாழ்க்கையையும் மிகத் தெளிவாக பிரதிபலிக்கிறது. நம்மில் பலர் வெளிப்புற சூழ்நிலைகளால் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நம்முடைய உள்ளத்தில் இருக்கும் எண்ணங்களால்தான் கட்டுப்பட்டிருக்கிறோம்.

என்னால் முடியாது, நான் மாற்ற முடியாது, என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் இப்படிப்பட்ட எண்ணங்க ளே நம்மை கட்டி வைத்திருக்கும் “காணாத கயிறுகள்”.

பல நேரங்களில் கடந்த கால தோல்விகள், பிறர் கூறிய எதிர்மறை வார்த்தைகள், மனக் காயங்கள் இவை எல்லாம் நம் மனதில் பதிந்து, நம்மை முன்னேறாமல் தடுத்து நிறுத்துகின்றன. நாம் முயற்சி செய்யாமல் நின்றுவிடுகிறோம். நம்மிடம் இருக்கும் வல்லமையை மறந்து விடுகிறோம்.

ஆனால் உண்மை என்னவென்றால் நாம் நினைப்பதை விட நாம் மிகவும் வலிமையானவர்கள். தேவன் நமக்குள் வைத்திருக்கும் திறமைகள், அருள், ஆவிக்குரிய வல்லமை இவை அனைத்தும் மிகப் பெரியவை.

சாத்தான் மனிதனை சங்கிலிகளால் கட்டுவதில்லை; எண்ணங்களால் கட்டுகிறான். “நீ தகுதியற்றவன்”, “நீ மாற்றமடைய முடியாது”, “நீ தோல்விக்கே உருவானவன்” என்று பொய்களை நம்பச் செய்கிறான். ஆனால் அவை உண்மைகள் அல்ல; நம்மை அடிமைப்படுத்தும் ஏமாற்றங்கள் மட்டுமே. தேவனுடைய சத்தியம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. நாம் பழைய மனிதர்கள் அல்ல; நாம் புதிய சிருஷ்டிகள். நம்முடைய கடந்த காலம் நம்மை நிர்ணயிக்காது. தேவனுக்குள் நமக்கு புதிய ஆரம்பம் உண்டு.

இதைத்தான் இறைவேதம் கூறுகிறது: “உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர்.12:2).

இந்த வசனம் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை உணர்த்து கிறது. மாற்றம் வெளியில் தொடங்குவதில்லை; அது மனதில் தொடங்குகிறது.

நம்முடைய சிந்தனையை மாற்றினால், நம்முடைய வாழ்க்கையும் மாறும். ஆகையால் நாம் செய்ய வேண்டியது: தேவனுடைய சத்தியத்தால் நமது சிந்தனையை நிரப்ப வேண்டும். கடந்த கால தோல்விகளை விட வேண்டும். புதிய முயற்சியை தொடங்க வேண்டும். ஜெபத்தில் உறுதியாக நிற்க வேண்டும். இவற்றை நாம் நடைமுறைப்படுத்தும்போது, நம்மை கட்டியிருந்த “காணாத கயிறுகள்” தானாகவே தளர்ந்து விடும்.

யானைகள் போல, பழைய தோல்விகளை நினைத்து நின்றுவிடாதீர். தேவன் உங்களுக்குள் வைத்துள்ள வல்லமை யை உணருங்கள். மீண்டும் முயற்சி செய்யத் துணிந்து முன்னேறுங்கள். முடிவாக நினைவில் கொள்ள வேண்டியது: நம்மை கட்டிப்போடுவது வெளிப்புற சூழ்நிலை அல்ல; நம் மனநிலையே.

“நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை நடத்திச்செல்வார்”

இந்த வரிகள் தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் பாடல் வரிகளாகும். ஆம், நம்பிக்கையை மாற்றினால் வாழ்க்கை மாறும்; தேவனுடைய சத்தியம் நம்மை விடுவிக்கும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: உறவுகளை காக்கும் ஆற்றல்
Next: ஆழமே உயரத்தின் அடித்தளம்

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026
தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன் david
  • வேதாகம மனிதர்கள்

தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன்

August 24, 2026
ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

August 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?
  • கேள்வி பதில்கள்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?

Editorial Team August 24, 2026
அந்நிய பாஷை உண்மையா?
  • கேள்வி பதில்கள்

அந்நிய பாஷை உண்மையா?

Editorial Team August 24, 2026
Jonah
  • தலைப்பு பிரசங்கங்கள்

யோனா புத்தகத்தில் தேவன் பயன்படுத்திய காரியங்கள் (சூழ்நிலை)

Editorial Team August 24, 2026
true-worship
  • வேதபகுதி பிரசங்கங்கள்

ஆகூரின் இரண்டு மனுக்கள்

Editorial Team August 24, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.