Skip to content
August 24, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • ஆபத்தைத் தவிர்ப்பதே ஞானம்
  • தியான செய்திகள்

ஆபத்தைத் தவிர்ப்பதே ஞானம்

Editorial Team July 9, 2026 1 minute read
tn_13

ஒரு பணக்கார முதலாளியிடம் கார் ஓட்டுநர் வேலைக் காக மூவர் விண்ணப்பித்தனர். அவர்கள் திறமையை அறிய முதலாளி ஒரு கேள்வி கேட்டார். “ஒரு ஆபத்தான பள்ளம் இருக்கும் போது, அதன் அருகில் எவ்வளவு தூரம் வரை நீங்கள் வண்டியை ஓட்டிச் செல்வீர்கள்?” என்றார்.

முதல் ஓட்டுநர் தன்னம்பிக்கையுடன், “நான் திறமை யானவன். பள்ளத்தின் விளிம்பிற்கு ஒரு அடி தூரம் வரை பயமின்றி ஓட்டுவேன்” என்றான். இரண்டாவது ஓட்டுநர் அதை விட பெருமையுடன், “நான் இன்னும் நெருக்கமாக, ஒரு அங்குலம் தூரம் மட்டும் விட்டு ஓட்ட முடியும்” என்றான்.

ஆனால் மூன்றாவது ஓட்டுநர் அமைதியாக, “ஐயா, நான் அந்தப் பக்கமே செல்லமாட்டேன். ஆபத்து இருப்பதை அறிந்தவுடன் அதிலிருந்து விலகியே ஓட்டுவேன்” என்றான்.

முதலாளி சிந்தித்தார். பிறகு மூன்றாவது ஓட்டுநரையே வேலைக்கு தேர்ந்தெடுத்தார்.
இந்தச்சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. ஆபத்தை அறிந்தும் அதற்க ருகில் சென்று, “எவ்வளவு தூரம் வரை சமாளிக்கலாம்?” என்று சோதிப்பது ஞானமல்ல. உண்மையான ஞானம் என்பது ஆபத்தைத் தவிர்ப்பதே.

இன்றைய வாழ்க்கையில் பல்வேறு ஆபத்துகள் நம்மைச் சூழ்ந்துள்ளன. தவறான நட்புகள், தீய பழக்கங்கள், சோதனை தரும் சூழ்நிலைகள், கட்டுப்பாடற்ற ஆசைகள் இவை எல்லாம் வெளியில் சாதாரணமாகத் தோன்றினாலும், உள்ளே ஆபத்தை மறைத்து வைத்திருக்கின்றன. சிலர் அவற்றை “சிறிது முயற்சி செய்து பார்க்கலாம்” என்று அணுகு கிறார்கள். ஆனால் அந்தச் சிறிய முயற்சிதான் பெரிய வீழ்ச்சிக்குக் காரணமாகிறது. ஆகையால், நம் வாழ்க்கையில் ஆபத்தை உண்டாக்கக்கூடிய நபர்கள், இடங்கள், பழக்கங்கள் மற்றும் சூழ்நிலைகளிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ள வேண்டும். எச்சரிக்கும் வார்த்தைகளையும், அறிவுறுத்தும் மனிதர்களையும், ஒழுங்கு விதிகளையும் நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு தவறை தேவன் நமக்கு உணர்த்தும் போது அதை உடனே விட்டு விடுவதுதான் உண்மையான புத்திசாலித்தனம். “எனக்கு எதுவும் ஆகாது”, “நான் இதை சமாளிக்க முடியும்” என்ற அகந்தை நம்மை ஆபத்திற்கு தள்ளும். அகந்தை அழிவுக்கு முன் வருகிறது; தாழ்மை பாதுகாப்பைத் தருகிறது. வாழ்க்கையில் வெற்றி பெறுவது எல்லா சவால்களையும் நேருக்கு நேர் சந்திப்பதிலேயே இல்லை. சில நேரங்களில், சரியான முடிவு என்பது அந்தச் சவாலிலிருந்து விலகிச் செல்வதுதான். ஆபத்தை வெல்ல சிறந்த வழி, அதற்குள் செல்வதல்ல, அதைத் தவிர்ப்பதே.

ஆபத்தை அணுகாதவன் அறிவாளி;
ஆபத்தைத் தவிர்ப்பவன் பாதுகாப்பானவன்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: மௌனமும் போதனையாகும்
Next: நிதானத்தில் கிடைக்கும் வழிகாட்டுதல்

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026
தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன் david
  • வேதாகம மனிதர்கள்

தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன்

August 24, 2026
ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

August 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?
  • கேள்வி பதில்கள்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?

Editorial Team August 24, 2026
அந்நிய பாஷை உண்மையா?
  • கேள்வி பதில்கள்

அந்நிய பாஷை உண்மையா?

Editorial Team August 24, 2026
Jonah
  • தலைப்பு பிரசங்கங்கள்

யோனா புத்தகத்தில் தேவன் பயன்படுத்திய காரியங்கள் (சூழ்நிலை)

Editorial Team August 24, 2026
true-worship
  • வேதபகுதி பிரசங்கங்கள்

ஆகூரின் இரண்டு மனுக்கள்

Editorial Team August 24, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.