Skip to content
August 24, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • மௌனமும் போதனையாகும்
  • தியான செய்திகள்

மௌனமும் போதனையாகும்

Editorial Team July 9, 2026 1 minute read
tn_12

ஒரு வாலிபன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறா மல் ஆலயத்திற்கு சென்று தேவனை ஆராதிப்பவன். அவன் ஆராதனையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். சபையின் போதகருக்கும் அவன் மீது நல்ல எண்ணம் இருந்தது. ஒழுக்க மும், பக்தியும் கொண்ட இளைஞனாக அவன் அனைவராலும் மதிக்கப்பட்டான்.

ஆனால் ஒரு கட்டத்தில், அவன் திடீரென ஆலயத் திற்கு வராமல் போனான். சில வாரங்கள் கடந்தும் அவன் முகம் காணப்படவில்லை. அவன் வழக்கமாக அமரும் இருக்கை வெறுமையாக இருப்பது போதகரின் கவனத்திற்குப்பட்டது. “என்ன காரணம்? ஏன் அவன் வரவில்லை?” என்ற கவலை அவரை அவன் வீட்டிற்கு செல்லத் தூண்டியது.

ஒரு குளிர்கால நாளில், போதகர் அந்த வாலிபனின் வீட்டிற்கு சென்றார். வீட்டின் முன்பாக விறகுகளை வைத்து நெருப்பு மூட்டி, குளிரைத் தணித்துக் கொண்டிருந்தான் அந்த வாலிபன். போதகரை பார்த்ததும் மரியாதையுடன் வரவேற்று, நெருப்பின் அருகில் அமருமாறு கேட்டுக் கொண்டான்.

இருவரும் அமைதியாக அமர்ந்தனர். எந்த வார்த்தை யும் பேசப்படவில்லை. அந்த மௌனம் ஒரு ஆழமான தருண மாக மாறியது. சில நேரம் கழித்து, போதகர் எரிந்து கொண்டிருந்த நெருப்பிலிருந்து ஒரு விறகு குச்சியை எடுத் தார். அதை தனியே வைக்க, அது மெல்ல மெல்ல அணை ந்து போகத் தொடங்கியது. அதன் சூடும் ஒளியும் குறைந்து, இறுதியில் அது முழுவதும் குளிர்ந்தது. அதை கவனமாக பார்த்துக் கொண்டிருந்த வாலிபன் எதுவும் பேசவில்லை.

பின்னர், போதகர் அதே விறகு குச்சியை மீண்டும் நெருப் பிற்குள் வைத்தார். உடனே அது மீண்டும் எரியத் தொடங்கி யது. அதன் ஒளியும் சூடும் மீண்டும் உயிர்ப்பெற்றது.

இதற்குப் பிறகு, போதகர் அமைதியாக எழுந்து, “நான் வருகிறேன்” என்று மட்டும் சொல்லி செல்லத் தொடங்கினார். அப்போது அந்த வாலிபன் உணர்ச்சியுடன் அவரை நிறுத்தி, “ஐயா, நீங்கள் எதுவும் பேசாமல் இன்று ஒரு பெரிய உண்மையை எனக்கு கற்றுக் கொடுத்துவிட்டீர்கள். இனி நான் ஆலயத்திற்கு தவறாமல் வருவேன்” என்று கூறினான். போதகர் புன்னகையுடன் அவனை நோக்கி அமைதியாக அங்கிருந்து சென்றார்.

இந்த நிகழ்வு நமக்கு ஆழமான ஆன்மீக உண்மையை எடுத்துக்காட்டுகிறது. தனியாக இருக்கும் ஒரு விறகு எளிதில் அணைந்துவிடும். ஆனால் சுற்றிலும் விறகுகளுடன் சேர்ந்து இருந்தால் அது நீண்ட நேரம் எரியும். அதுபோல மனிதனின் விசுவாசமும் தனிமையில் மங்கிவிடும்; ஆனால் சபை ஐக்கிய த்தில் அது பலப்படும்.

மேலும், ஒருவரை திருத்தும்போது கடுமையான வார்த் தைகள் தேவையில்லை. அன்பும் ஞானமும் இருந்தால், ஒரு சிறிய செயலும் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அந்த போதகர் கண்டிக்கவில்லை, குற்றம் சாட்டவில்லை; ஆனால் அமைதியான செயலால் உண்மையை உணர்த்தினார்.

இன்றைய வாழ்க்கையிலும் இது மிக முக்கியமான பாடமாகும். பலர் தனிமையில் வாழ விரும்பி, கூட்டுத்தொழு கையை புறக்கணிக்கிறார்கள். ஆனால் இறைவேதம், “சபை கூடிவருதலை விட்டுவிடாமல் ஒருவருக்கொருவர் புத்திசொல் லுங்கள்” என்று எச்சரிக்கிறது.

ஆகையால், நாம் ஒருவருடன் ஒருவர் இணைந்து வாழ வேண்டும். நம் விசுவாசத்தை வளர்க்கும் சூழலில் இருக்க வேண்டும். நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு போதனை யாக இருக்க வேண்டும்.

சில நேரங்களில்
வார்த்தைகள் தேவையில்லை;
நம் செயல்களே பேசட்டும்…

சேர்ந்து இருப்போம்! எரிந்து கொண்டிருப்போம்.!!

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: குற்றமனசாட்சியை விட்டு வெளியே வாருங்கள்
Next: ஆபத்தைத் தவிர்ப்பதே ஞானம்

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026
தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன் david
  • வேதாகம மனிதர்கள்

தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன்

August 24, 2026
ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

August 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?
  • கேள்வி பதில்கள்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?

Editorial Team August 24, 2026
அந்நிய பாஷை உண்மையா?
  • கேள்வி பதில்கள்

அந்நிய பாஷை உண்மையா?

Editorial Team August 24, 2026
Jonah
  • தலைப்பு பிரசங்கங்கள்

யோனா புத்தகத்தில் தேவன் பயன்படுத்திய காரியங்கள் (சூழ்நிலை)

Editorial Team August 24, 2026
true-worship
  • வேதபகுதி பிரசங்கங்கள்

ஆகூரின் இரண்டு மனுக்கள்

Editorial Team August 24, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.