Skip to content
October 8, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • விதைப்பதையே அறுப்போம்
  • தியான செய்திகள்

விதைப்பதையே அறுப்போம்

Editorial Team July 8, 2026 1 minute read
tn_1

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு எளிய விவசாயி, தினமும் தன் வீட்டில் தயாரிக்கும் 500 கிராம் வெண்ணையை அருகிலிருந்த ஒரு பேக்கரி கடைக்குக் கொண்டு சென்று கொடுத்து வந்தான். அந்த பேக்கரி கடைக்காரரும் அவ்வப் போது அதற்கான பணத்தை வழங்கி வந்தார். இவ்வாறு அவர்களுக்குள் நம்பிக்கையுடனான பரிமாற்றம் பல நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஒரு நாள், பேக்கரி கடைக்காரருக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. “விவசாயி கொடுத்து வரும் வெண்ணை உண்மையிலேயே 500 கிராமா?” என்ற எண்ணம் அவரை ஆட்கொண்டது. உடனே அவர் அந்த வெண்ணையை எடை பார்த்தார். அதில், குறிப்பிடப்பட்ட அளவான 500 கிராமை விட குறைவாக இருப்பது அவருக்குத் தெரிய வந்தது. இதனால் கடும் கோபமடைந்த கடைக்காரர், “நான் இவ்வளவு நாட்களாக ஏமாற்றப்பட்டு வந்தேனே!” என்று எண்ணி, அந்த விவசாயியை உள்ளூர் நீதிபதியிடம் புகார் செய்தார்.

வழக்கு நீதிபதியின் முன் வந்தது. நீதிபதி அமைதியாக விவசாயியிடம் கேட்டார்: “நீ வெண்ணையை அளப்பதற்கு எடை கருவிகளைப் பயன்படுத்துகிறாயா?” அதற்கு விவசாயி மிகவும் எளிமையாக பதிலளித்தார்: “ஐயா, என்னிடம் எடைக் கருவிகள் எதுவும் இல்லை. ஆனால் நான் ஒரு முறையைப் பயன்படுத்துகிறேன்.”

அது என்ன முறை? என்று நீதிபதி ஆர்வமாகக் கேட்டார். விவசாயி விளக்கினார்: “ஐயா, நான் இந்த பேக்கரி கடைக்குக் வெண்ணை கொடுக்க ஆரம்பித்த நாளிலிருந்தே, அவர்களுடைய கடையில் இருந்து தினமும் ஒரு பிரட் வாங்குவது எனக்கு வழக்கமாகிவிட்டது. அந்த பிரட்டின் மேல் 500 கிராம் என்று எழுதப்பட்டிருக்கும். அதனை அளவா கக் கொண்டு, அதற்கு சமமான எடையில் வெண்ணையை அளந்து கொடுத்து வந்தேன். எனவே, நான் எவரையும் ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை.”

இந்த விளக்கத்தை கேட்ட நீதிபதி, விவசாயியிடம் எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்ந்தார். உண்மை யில் தவறு செய்தது பேக்கரி கடைக்காரரே என்பதும் தெளி வாயிற்று. அவர் அளவில் குறைவான பிரட்டை விற்றதால், அதையே அடிப்படையாகக் கொண்டு விவசாயியும் வெண்ணை யை அளந்திருந்தார்.

இதனால் நீதிபதி, பேக்கரி கடைக்காரரை எச்சரித்து அனுப்பினார். “நீ மற்றவர்களை ஏமாற்ற நினைத்தால், இறுதி யில் நீயே ஏமாறுவாய்” என்ற பாடத்தை அவர் தெளிவாக உணர்ந்தார்.

இறைமக்களே, இந்தச் சம்பவம் நமக்கு ஒரு முக்கிய மான சத்தியத்தை எடுத்துரைக்கிறது. நாம் எந்த அளவினால் அளக்கிறோமோ, அதே அளவினால்தான் நமக்கும் அளக்கப் படும். பிறரை ஏமாற்ற வேண்டும் என்று ஒருவர் நினைக்கும் போது, உண்மையில் அவர் தன்னையே ஏமாற்றிக் கொள்கி றார். வாழ்க்கை என்பது ஒரு விதைப்பும் அறுவடையும் கொண்ட பயிர்செய்கையைப் போன்றது.

திருமறை இதைப்பற்றி தெளிவாகக் கூறுகிறது:

“மனுஷன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான்” (கலா.6:7).

“சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான்; பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” (2 கொரி. 9:6).

உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடிக்க வேண்டியது போல, மனிதன் செய்த செயல்களின் விளைவுகளை அவன் தவிர்க்க முடியாது. குறுகிய லாபத்திற்காக தவறான வழியில் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை, இறுதியில் வருத்தத்தையும் வீணான போராட்டத்தையும் மட்டுமே தரும்.

“சொற்ப பணம் தேடி, அற்ப மனம் ஓடி,
ஆயுள் வரை வாடி, அடங்குகிறது நாடி”
என்பதுபோன்ற வாழ்க்கை வாழ்வதில் என்ன பயன்?

ஆகையால், நாம் நல்லதை விதைப்போம். நியாயத் தையும் நேர்மையையும் கடைப்பிடிப்போம். அன்பையும் நீதியையும் வாழ்க்கையில் வளர்ப்போம். அப்போதுதான் நாம் நன்மையை அறுவடையாகப் பெறுவோம்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: அரண்மனை எஸ்தர்களே விழித்தெழுங்கள் – விசுவாசம், ஜெபம் மற்றும் பொறுப்பின் அழைப்பு
Next: அவமானங்களை உதறிடுங்கள்

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

king
  • வேதாகம மனிதர்கள்

சவுல் – இஸ்ரவேலின் முதல் ராஜா

Editorial Team October 5, 2026
சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன் samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

Watchman Nee
  • கவிதைகள்

ஜெபமும் ஆவிக்குரிய போராட்டமும் குறித்து 10 ஆழமான கருத்துகள்

Editorial Team October 8, 2026
women touch jesus
  • வேதபகுதி பிரசங்கங்கள்

தொட்டால் போதும் — விசுவாசம் விடுதலையைப் பெற்றது!

Editorial Team October 7, 2026
caananite women
  • வேதபகுதி பிரசங்கங்கள்

விடாமல் மன்றாடு — விசுவாசம் விடை பெறும்!

Editorial Team October 7, 2026
forgiveness
  • தலைப்பு பிரசங்கங்கள்

மன்னியுங்கள்; விடுதலை பெறுங்கள்!

Editorial Team October 7, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.